Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட் போனா பரவாயில்லை.. நாங்க அப்படிதான் ஆடுவோம்.. அயர்லாந்தை ஓட ஓட விரட்டி அடித்த இங்கிலாந்து!

சௌதாம்ப்டன்: இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி சௌதாம்ப்டன் நகரில் நடைபெற்றது.

Recommended Video

ENG vs IRE 1st ODI | England won by 6 wickets.

இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி பேட்டிங்கில் தடுமாறியது, பந்துவீச்சில் அந்த அணி இங்கிலாந்து அணியின் விக்கெட்களை வீழ்த்தினாலும், அவர்கள் அதிரடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் அயர்லாந்து களமிறங்கியது.

டாஸ்

டாஸ்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி சுமாராகவே பேட்டிங் ஆடியது. பால் ஸ்டிர்லிங் 12, டெலானி 0, ஆண்ட்ரூ பால்பிர்னி 15, டெக்டார் 28 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

சரிந்த விக்கெட்கள்

சரிந்த விக்கெட்கள்

கெவின் ஓ பிரையன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அயர்லாந்து அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது களமிறங்கினார் கர்ட்டிஸ் கேம்பர். முதல் போட்டி போலவே அவர் பொறுப்பாக ஆடினார். அயர்லாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

மீண்டும் கர்ட்டிஸ் கேம்பர்

மீண்டும் கர்ட்டிஸ் கேம்பர்

கர்ட்டிஸ் கேம்பருக்கு டக்கர் 21, சிமி சிங் 25, மெக்பிரின் 24 ரன்களும் அடித்து ஒத்துழைப்பு அளித்தனர். மீண்டும் சிறப்பாக ஆடிய கர்ட்டிஸ் கேம்பர் 87 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். 49வது ஓவரில் தான் அவர் ஆட்டமிழந்தார். அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் டேவிட் வில்லி 2, டாப்லி 1, ஜேம்ஸ் வின்ஸ் 1, அதில் ரஷித் 3, சகிப் மஹ்மூத் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது இங்கிலாந்து அணி. துவக்க வீரர் ஜேசன் ராய் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தர்.

பேர்ஸ்டோ அதிரடி

பேர்ஸ்டோ அதிரடி

மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம் ஆடினார். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் அவர் தன் அதிரடியை தொடர்ந்தார். வின்ஸ் 16, டாம் பான்டன் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் சாம் பில்லிங்க்ஸ் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

பேர்ஸ்டோ 41 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ருத்ர தாண்டவம் ஆடி வெளியேறினார். அடுத்து இயான் மார்கன், மொயீன் அலி ஒரே ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். எனினும், அடுத்து வந்த டேவிட் வில்லி, சாம் பில்லிங்க்ஸ் உடன் இணைந்து பொறுப்பான ஆட்டம் ஆடினார்.

பொறுப்பாக ஆடிய ஜோடி

பொறுப்பாக ஆடிய ஜோடி

137 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்த நிலையில் டேவிட் வில்லி - சாம் பில்லிங்க்ஸ் ஜோடி பொறுப்பாக ஆடி அணியை கரை சேர்த்தது. பில்லிங்க்ஸ் நிதான ஆட்டம் ஆடினாலும், வில்லி அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 46 பந்துகளில் 47 ரன்கள் குவித்தும், பில்லிங்க்ஸ் 61 பந்துகளில் 46 ரன்கள் குவித்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இங்கிலாந்து அணி 32.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 6 விக்கெட்களை இழந்த போதும் அந்த அணி தன் அதிரடி ஆட்டத்தை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ஒரே ஆறுதல்

ஒரே ஆறுதல்

அயர்லாந்து அணிக்கு கர்ட்டிஸ் கேம்பர் மட்டுமே ஆறுதலாக அமைந்தார். அரைசதம் அடித்த அவர் பந்துவீச்சில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜோஷுவா லிட்டில் 3 விக்கெட்கள் வீழ்த்தி ஆறுதல் அளித்தார். மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4 அன்று நடைபெற உள்ளது.

Story first published: Sunday, August 2, 2020, 10:03 [IST]
Other articles published on Aug 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+