Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருகிட்ட வந்து சீன் போடறீங்க? 15.4 ஓவர்களில் அயர்லாந்து சோலியை முடித்து அனுப்பிய இங்கிலாந்து!

லண்டன் : லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணிக்கு சம்மட்டி அடி கொடுத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தடுமாறியது. வெறும் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில் அயர்லாந்து அணியை கதற விட்டு, பழிக்குப் பழி வாங்கி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ்

இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ்

இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஆன ஒரே ஒரு டெஸ்ட் போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது அயர்லாந்து அணி. டிம் முர்டாக் 5 விக்கெட்கள் எடுத்த, இங்கிலாந்து அணி 85 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்க்ஸில் சுருண்டது.

மூன்று டக் அவுட்

மூன்று டக் அவுட்

ஜோ டென்லி 23 ரன்கள் எடுத்ததே அந்த அணியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மூன்று பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து அணி.

உலகக்கோப்பை சாம்பியனா இது?

உலகக்கோப்பை சாம்பியனா இது?

50 ஓவர் உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அதே மைதானத்தில், கோப்பை வென்ற பத்தாம் நாள் இங்கிலாந்து அணி இந்த அவமானத்தை சந்தித்தது. தன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் அயர்லாந்து, 1011வது டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணியை ஆட்டுவித்தது. இதனால், கடும் விமர்சனத்தை சந்தித்தது இங்கிலாந்து.

அயர்லாந்து முதல் இன்னிங்க்ஸ்

அயர்லாந்து முதல் இன்னிங்க்ஸ்

அடுத்து அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. பால்பிர்னி 55 ரன்கள் சேர்க்க, அயர்லாந்து அணி போராடி 207 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியை விட 122 ரன்கள் கூடுதலாக எடுத்து முன்னிலை பெற்றது.

மானம் காத்த ஜாக் லீச்

மானம் காத்த ஜாக் லீச்

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாளின் கடைசி ஓவர் மட்டுமே மீதமிருந்த நிலையில் நைட் வாட்ச்மேனாக ஜாக் லீச் என்ற பந்துவீச்சாளரை களமிறக்கியது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களில் ஜேசன் ராய் மட்டுமே 72 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் வரிசயாக நடையை கட்டினர். ஆனால், ஒப்புக்கு சப்பாணியாக வந்த ஜாக் லீச் நங்கூரம் போட்டது போல நின்று இங்கிலாந்து அணியின் மானம் காத்தார்.

எளிய இலக்கு

எளிய இலக்கு

பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் ஜாக் லீச் 92 ரன்கள் சேர்த்தார். 16 ஃபோர் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசி நேரத்தில் சாம் கர்ரன் அதிரடியாக ஆடி 37 ரன்களும், ஸ்டூவர்ட் பிராடு 21 ரன்களும் சேர்க்க, இங்கிலாந்து அணி 3௦3 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

பிராடு, வோக்ஸ் விக்கெட் மழை

பிராடு, வோக்ஸ் விக்கெட் மழை

அயர்லாந்து அணி சில ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடினால், பின்னர் நிதானமாக ரன் குவித்து வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. எனினும், இங்கிலாந்து அணியின் துவக்க பந்துவீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராடு மற்றும் கிறிஸ் வோக்ஸ்-இன் மிரட்டல் பந்துவீச்சில் 15.4 ஓவர்களில் மொத்தமாக 10 விக்கெட்களையும் இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்தது அயர்லாந்து.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் கத்துக்குட்டி என்றாலும், முதல் இரண்டு நாட்கள் வரை இங்கிலாந்து அணிக்கு "தண்ணி" காட்டியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் ஏற்பட்ட அவமானத்துக்கு, இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் பழி தீர்த்தது.

Story first published: Friday, July 26, 2019, 19:34 [IST]
Other articles published on Jul 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+