Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விதி வலியது.. அன்று முகத்தில் அடித்து அனுப்பிய இங்கிலாந்து.. இன்று திருப்பி அடித்த டிம் முர்டாக்!

லண்டன் : இங்கிலாந்து அணியின் 5 விக்கெட்களை வீழ்த்திய அயர்லாந்தின் டிம் முர்டாக் உண்மையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்ற சுவாரசியத் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

50 ஓவர் உலகக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்ற பத்து நாட்களுக்குள் டெஸ்ட் போட்டியில் சம்மட்டி அடி கொடுத்து உட்கார வைத்துள்ளது அயர்லாந்து.

இங்கிலாந்துக்கு தர்ம அடி

இங்கிலாந்துக்கு தர்ம அடி

அயர்லாந்து அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது இங்கிலாந்து அணி. தன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அயர்லாந்து அணி, 1011வது டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணியை பந்துவீச்சில் புரட்டிப் போட்டது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் வெறும் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமாக காட்சி அளித்தது.

டிம் முர்டாக் அசத்தல்

டிம் முர்டாக் அசத்தல்

இங்கிலாந்து அணியின் ஐந்து முக்கிய விக்கெட்களை சாய்த்தார் டிம் முர்டாக். அதுவே இங்கிலாந்து அணி தலைகுனியும் அளவுக்கு செல்ல முக்கிய காரணம். அந்த டிம் முர்டாக் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். அது மட்டுமல்ல, போட்டி நடந்த லண்டன் நகரத்தை சேர்ந்தவர். அப்புறம் எப்படி அயர்லாந்து நாட்டுக்காக ஆடி வருகிறார்?

அன்று அவமானம்

அன்று அவமானம்

இங்கிலாந்து நாட்டில் இளம் வீரராக உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார் முர்டாக், இங்கிலாந்து அண்டர் 19 அணிக்காக கூட ஆடி இருக்கிறார். எனினும், 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட்டால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இனி இங்கிலாந்து அணியில் நுழையவே முடியாது என்கிற அளவுக்கு நிலைமை சென்றது.

அயர்லாந்து சென்றார்

அயர்லாந்து சென்றார்

அப்போது அயர்லாந்து வீரர் எட் ஜாய்ஸ் இவரை சமாதானம் செய்து அயர்லாந்து அழைத்துள்ளார். முர்டாக்கின் தாத்தா அயர்லாந்தின் டப்ளின் நகரை சேர்ந்தவர் என்பதால், அயர்லாந்து குடியுரிமை பெற்றார். பின்னர் அயர்லாந்து கிரிக்கெட் அணியில் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

திருப்பி அடித்தார்

திருப்பி அடித்தார்

அன்று தன்னை வேண்டாம் என்று சொன்ன இங்கிலாந்து அணியை இன்று தன் சொந்த ஊரான லண்டனில் வைத்து சிறப்பாக திருப்பி அடித்துள்ளார். இங்கிலாந்தின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் ஐந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்தி தெறிக்கவிட்டார்.

சாதாரண அடி இல்லை

சாதாரண அடி இல்லை

இவர் கொடுத்த அடி சாதாரண அடி இல்லை. இங்கிலாந்து அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பை வென்றது. அதே மைதானத்தில் வைத்து இங்கிலாந்து அணியை வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு அடித்துள்ளார் டிம் முர்டாக்.

Story first published: Wednesday, July 24, 2019, 20:20 [IST]
Other articles published on Jul 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+