Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு தர்ம அடி.. சாம்பியன் இங்கிலாந்தை வைச்சு செஞ்ச அயர்லாந்து!

Recommended Video

கத்துக்குட்டி அயர்லாந்திடம் கவிழ்ந்து போன உலக சாம்பியன் இங்கிலாந்து

லண்டன் : இங்கிலாந்து அணி 2019 உலகக்கோப்பை தொடரை வென்று பத்து நாள் கூட ஆகவில்லை. அதற்குள் கிரிக்கெட்டில் பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி அடுத்து அயர்லாந்து அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது.

எதிர்பார்ப்பு என்ன?

எதிர்பார்ப்பு என்ன?

இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சில அனுபவம் குறைந்த வீரர்களுடன் களமிறங்கினாலும், அயர்லாந்து அணியை விட பலம் வாய்ந்த அணியாகவே காட்சி அளித்தது. தன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அயர்லாந்து அணி ஓரளவு தாக்குப் பிடித்தாலே பெரிது என்ற எதிர்பார்ப்பு தான் முதலில் இருந்தது.

துவக்கம்

துவக்கம்

போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அயர்லாந்து அணியின் முர்டாக், துவக்க வீரர் ஜேசன் ராயை 5 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து டென்லியை 23 ரன்களில் வெளியேற்றினார் அடைர்.

விக்கெட் மழை

விக்கெட் மழை

தொடர்ந்து அடைர் மற்றும் முர்டாக் விக்கெட்டாக வீழ்த்தித் தள்ளினர். 36 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இருந்த நிலையில், அடுத்து 43 ரன்களுக்கு 7 விக்கெட்கள் வீழ்ந்து பெரும் அவமானத்தில் சிக்கியது இங்கிலாந்து. அப்போதே இங்கிலாந்து ரசிகர்கள் மனமுடைந்து போய் உலகக்கோப்பை வெற்றியை எல்லாம் மறந்தார்கள்.

வரிசையாக டக் அவுட்

வரிசையாக டக் அவுட்

மிகச் சிறந்த பேட்ஸ்மேனும், இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனுமான ஜோ ரூட் 2 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் மூவரும் மிடில் ஆர்டரில் வரிசையாக களமிறங்கி டக் அவுட் ஆனார்கள்.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

இறுதியாக சாம் கர்ரன் 18, ஸ்டோன் 19 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது. வெறும் 23.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

முர்டாக் 9 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அடைர் 7.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ரான்கின் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அயர்லாந்து அணியில் மொத்தமே நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி இருந்தனர்.

சாம்பியன் அணி

சாம்பியன் அணி

ஜூன் 14 ஆம் தேதி உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, ஜூன் 24ஆம் தேதி வெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள அயர்லாந்து அணியிடம் 85 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி உள்ளது.

அவமானம்

அவமானம்

இந்த மோசமான சம்பவம் இங்கிலாந்து அணியின் சொந்த மண்ணில் நடந்துள்ளது. அதுவும் அதே உலகக்கோப்பை வென்ற மைதானத்தில் நடந்துள்ளது. ஒரு சாம்பியன் அணிக்கு இதை விட மோசமான அவமானம் எதுவுமே இருக்க முடியாது என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறவில்லை என்றால், அது இன்னும் பெரிய அவமானமாக மாறி விடும்.

Story first published: Wednesday, July 24, 2019, 19:26 [IST]
Other articles published on Jul 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+