Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WC 2026: இத்தாலியை பந்தாடிய இங்கிலாந்து.. வில் ஜாக்ஸ் அதிரடி.. 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் குரூப் சி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், இத்தாலி அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

பட்லர் ஏமாற்றம்

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடினார். அவர் 15 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ENG vs ITA Will Jacks Blasts Half-Century as England Defeats Italy by 24 Runs to Secure T20 World Cup 2026 Super 8 Spot

நடுவரிசை தடுமாற்றம்

அடுத்து வந்த ஜேக்கப் பெத்தல் 23 ரன்களும், டாம் பான்டன் 30 ரன்களும் எடுத்துச் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹாரி ப்ரூக் 14 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சற்றுத் தடுமாறியது.

வில் ஜாக்ஸ் அதிரடி

அப்போது களமிறங்கிய வில் ஜாக்ஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இத்தாலி பந்துவீச்சாளர்களை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்த அவர், பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 22 பந்துகளை மட்டுமே சந்தித்த வில் ஜாக்ஸ், 3 பவுண்டரிகள் மற்றும் 4 இமாலய சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்குத் துணையாக சாம் கரன் 19 பந்துகளில் 25 ரன்களும், ஜேமி ஓவர்டன் 9 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர். வில் ஜாக்ஸின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

இத்தாலி அணி தரப்பில் கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் கிருஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அலி ஹசன், ஜேஜே ஸ்மட்ஸ் மற்றும் பென் மனென்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இங்கிலாந்து வெற்றி

பின்னர் 203 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இத்தாலி 20 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தாலி அணி போராடித் தோல்வியடைந்தது. அந்த அணியால் இங்கிலாந்தின் பந்துவீச்சை முழுமையாகச் சமாளிக்க முடியவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடுத்து இங்கிலாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த பிரிவில் இடம் பெற்று இருக்கும் ஸ்காட்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தன. இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

Story first published: Monday, February 16, 2026, 19:18 [IST]
Other articles published on Feb 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+