For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ENG vs SA: மரண அடி அடித்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட்.. சூர்யகுமாரின் உலக சாதனையை உடைத்தார்

மான்செஸ்டர்: மான்செஸ்டரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தனது அதிரடி ஆட்டத்தால் புதிய சரித்திரம் படைத்துள்ளார். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், பில் சால்ட் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து, கிரிக்கெட் உலகின் பல்வேறு சாதனைகளைத் தகர்த்தெறிந்தார்.

இந்த இன்னிங்ஸ் மூலம், டி20 போட்டிகளில் தனது நான்காவது சதத்தைப் பதிவு செய்த பில் சால்ட், குறைந்த இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் அடித்த சூர்யகுமார் யாதவின் உலக சாதனையை முறியடித்தார். மேலும், இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் மற்றும் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் அவர் பதிவு செய்தார்.

ENG vs SA Phil Salt Smashes Suryakumar Yadav s T20 World Record Makes History

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்யும் கட்டாயத்தில் களமிறங்கியது. இந்தப் போட்டியில், பில் சால்ட் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு ரன் மழையைப் பொழிந்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு தென்னாப்பிரிக்க பந்துவீச்சைச் சிதறடித்தனர்.

இந்த ஜோடி வெறும் 7.5 ஓவர்களில் 126 ரன்கள் குவித்தது. பட்லர் 30 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் தனது அதிரடியைத் தொடர்ந்த சால்ட், வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய அவர், 39 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.

சரித்திரம் படைத்த சால்ட்:

இந்த சதம், சர்வதேச டி20 அரங்கில் பில் சால்ட்டின் நான்காவது சதமாகும். இதன் மூலம், அவர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவின் மெகா உலக சாதனையை முறியடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 57 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால், பில் சால்ட் தனது 42-வது இன்னிங்ஸிலேயே இந்த இமாலய சாதனையை எட்டி, டி20 வரலாற்றில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 50 இன்னிங்ஸ்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரரும் இவரே.

அதிவேகமாக 4 டி20 சதங்கள் அடித்த வீரர்கள் (இன்னிங்ஸ் அடிப்படையில்):

  • பில் சால்ட் (இங்கிலாந்து) - 42
  • சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 57
  • ரோஹித் சர்மா (இந்தியா) - 79
  • கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 82

சாதனைகளின் நாயகன்:

பில் சால்ட் அத்துடன் நிற்கவில்லை. மேலும் பல சாதனைகளைத் தன்வசப்படுத்தினார். இந்தப் போட்டியில் அவர் படைத்த சாதனைகளின் முழுப் பட்டியல் இதோ:

இங்கிலாந்தின் அதிவேக சதம்: வெறும் 39 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், லியாம் லிவிங்ஸ்டோனின் (42 பந்துகள்) சாதனையை முறியடித்து, இங்கிலாந்துக்காக அதிவேக டி20 சதம் அடித்த வீரர் ஆனார்.

இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர்: ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 141 ரன்கள் குவித்த சால்ட், டி20 போட்டிகளில் ஒரு இங்கிலாந்து வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற தனது சொந்த சாதனையை (119 ரன்கள்) மீண்டும் முறியடித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின் (122 ரன்கள்) சாதனையை சால்ட் தகர்த்தெறிந்தார்.

  • பில் சால்ட் (இங்கிலாந்து) - 141*
  • பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 122
  • திலக் வர்மா (இந்தியா) - 120
  • ஜொனாதன் சார்லஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 118
  • கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) - 117

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேக டி20 சதம்: ஜொனாதன் சார்லஸின் சாதனையை (39 பந்துகள்) சமன் செய்தார்.

  • பில் சால்ட் - 39 பந்துகள்
  • ஜொனாதன் சார்லஸ் - 39 பந்துகள்
  • திலக் வர்மா - 41 பந்துகள்
  • சஞ்சு சாம்சன் - 47 பந்துகள்
  • பாபர் அசாம் - 49 பந்துகள்

இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் நிகழ்ந்த முட்டாள்தனம்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்

இந்தப் போட்டியில் சால்ட்டின் அதிரடி மற்றும் பட்லரின் காட்டடியால், இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இது ஒரு முழு உறுப்பினர் அணிக்கு எதிரான அதிகபட்ச டி20 ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

Story first published: Saturday, September 13, 2025, 7:09 [IST]
Other articles published on Sep 13, 2025
English summary
ENG vs SA: Phil Salt Smashes Suryakumar Yadav's T20 World Record, Makes History
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+