Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs SL: "நான் டபுள் செஞ்சுரி அடிச்சதே வேஸ்ட்".. இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் விரக்தி

ராவல்பிண்டி: பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி உலக சாதனை படைத்த ஹாரி புரூக், தனது அணி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்ததால் அந்த ரன்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். 430 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதும், இங்கிலாந்து அணி அதனைத் தக்கவைக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது.

இந்த மோசமான தோல்விக்குப் பின்னர் பேசிய ஹாரி புரூக், "இரண்டு அணிகளுமே நம்பமுடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக விளையாடின. ஆனால் இலங்கை அணி எங்களை முழுமையாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. 400 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை இவ்வளவு தைரியமாக சேஸ் செய்து அவர்கள் ஆடிய விதம் பாராட்டுக்குரியது. நான் இரட்டை சதம் அடித்தது நல்ல இன்னிங்ஸ்தான் என்றாலும், தோற்றுப் போன பிறகு என் கண்களுக்கு இந்த சாதனையில் எந்த மதிப்பும் இல்லை. அடுத்தடுத்த போட்டிகளில் சுதாரித்துக் கொண்டு இறுதிப்போட்டிக்குச் செல்வோம்" என்று விரக்தியுடன் கூறினார்.

ENG vs SL Harry Brook Disappointed Despite Double Century as Sri Lanka Chases Down 430

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களைக் குவித்தது. புரூக் 116 பந்துகளில் 21 பவுண்டரிகள், 10 சிக்சர்களுடன் 202 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். ஜோ ரூட் 69 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார். வில் ஜாக்ஸ் 30 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.

56 ஆண்டு கால வரலாறை உடைத்து ஆஸ்திரேலியாவை கதறவிட்ட தென்னாப்பிரிக்கா.. இன்னிங்ஸ் வெற்றி மூலம் பதிலடி

56 ஆண்டு கால வரலாறை உடைத்து ஆஸ்திரேலியாவை கதறவிட்ட தென்னாப்பிரிக்கா.. இன்னிங்ஸ் வெற்றி மூலம் பதிலடி

430 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய இலங்கை அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் பவன் ரதநாயக்கே 130 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 97 ரன்களும், தசுன் ஷனகா 50 பந்துகளில் 97 ரன்களும் விளாசி மிரட்டினர். இறுதியில் ஜனித் லியனகே வெறும் 27 பந்துகளில் 61 ரன்கள் விளாசி இலங்கை வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். சாம் கரன் 9 ஓவர்களில் 103 ரன்களை வாரி வழங்கினார்.

Story first published: Friday, October 23, 2026, 10:21 [IST]
Other articles published on Oct 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+