Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உலக சாதனைப் பட்டியல் ஒன்றில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

Recommended Video

ENG VS WI 1ST TEST | Stuart Broad frustated over Ben Stokes

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோதி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்படுகிறார்.

4 விக்கெட்கள்

4 விக்கெட்கள்

ஆல் - ரவுண்டரான அவர் இந்தப் போட்டியில் 49 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அதன் மூலம் 150 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி முக்கிய மைல்கல்லை எட்டினார். அதுமட்டுமின்றி மற்றொரு முக்கிய சாதனையையும் செய்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

பென் ஸ்டோக்ஸ் ஆட்டம்

பென் ஸ்டோக்ஸ் ஆட்டம்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

விக்கெட்கள்

விக்கெட்கள்

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறியது. அனுபவ பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 3 விக்கெட்களும், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.

150 டெஸ்ட் விக்கெட்கள்

150 டெஸ்ட் விக்கெட்கள்

பென் ஸ்டோக்ஸ் தன் மூன்றாவது விக்கெட்டாக அல்சாரி ஜோசப்பை வீழ்த்திய போது 150 டெஸ்ட் விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்கள் வீழ்த்திய ஆல் - ரவுண்டர்கள் வரிசையில் இணைந்தார்.

ஆறாவது வீரர்

ஆறாவது வீரர்

இதுவரை ஐந்து வீரர்கள் இடம் பெற்றுள்ள அந்தப் பட்டியலில் ஆறாவதாக பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். கார்பீல்டு சோபர்ஸ், இயான் போத்தம், கபில் தேவ், ஜாக்கஸ் காலிஸ், டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

மேலும், அதி வேகமாக 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்கள் வீழ்த்திய டெஸ்ட் ஆல் - ரவுண்டர்கள் பட்டியலில் கபில் தேவ், ஜாக்கஸ் காலிஸ், இயான் போத்தம் ஆகியோரை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் கார்பீல்டு சோபர்ஸ், இடம் பெற்றுள்ளார்.

ஒரு போட்டியில்..

ஒரு போட்டியில்..

மேலும், அதி வேகமாக 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்கள் வீழ்த்திய டெஸ்ட் ஆல் - ரவுண்டர்கள் பட்டியலில் கபில் தேவ், ஜாக்கஸ் காலிஸ், இயான் போத்தம் ஆகியோரை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் கார்பீல்டு சோபர்ஸ், இடம் பெற்றுள்ளார்.

கபில் தேவ் அதிகம்

கபில் தேவ் அதிகம்

இயான் போத்தம் 69 போட்டிகள், ஜாக்கஸ் காலிஸ் 69 போட்டிகள், கபில் தேவ் 97 போட்டிகளில் இந்த மைல்கல் சாதனையை எட்டி உள்ளனர். இந்த ஆல் - ரவுண்டர்களின் சாதனைப் பட்டியலில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் கபில் தேவ். அவர் 434 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

இங்கிலாந்து சிக்கல்

இங்கிலாந்து சிக்கல்

பென் ஸ்டோக்ஸ் சாதனை செய்தாலும், இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்து உள்ளது. முதல் இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்கள் குவித்து, 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Saturday, July 11, 2020, 13:18 [IST]
Other articles published on Jul 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+