Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணியை பந்துவீச்சில் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து, பேட்டிங்கிலும் அசத்தி வருகிறது.

Recommended Video

Eng VS WI 1st Test Day 3 | Windies on top in 1st innings

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எடுத்த ஒரு தவறான முடிவால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்துவீச்சில் அச்சுறுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்கள் இழந்து 185 ரன்கள் எடுத்து தொடர்ந்து ரன் குவித்து வருகிறது.

ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை!

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் மழையின் காரணமாக 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

வெ.இண்டீஸ் பவுலிங்

வெ.இண்டீஸ் பவுலிங்

வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டது. இங்கிலாந்து வீரர்களால் எளிதில் ரன் குவிக்க முடியவில்லை. ஷனான் கேப்ரியல் வேகத்தில் இங்கிலாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சரிந்தனர். எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

மிரட்டிய ஹோல்டர்

மிரட்டிய ஹோல்டர்

பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் கலக்கினார். அவர் ஆறு விக்கெட்கள் வீழ்த்தினார். கேப்ரியல் 4 விக்கெட்கள் சாய்த்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெ.இண்டீஸ் பேட்டிங்

வெ.இண்டீஸ் பேட்டிங்

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் பிராத்வைட் சிறப்பாக ஆடினார். கேம்பல் 28, ஹோப் 18, ப்ரூக்ஸ் 39 ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அரைசதம் அடித்த பிராத்வைட்

அரைசதம் அடித்த பிராத்வைட்

பிராத்வைட் சிறப்பாக ஆடி 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்து இருந்தது. எப்படியும் இங்கிலாந்து அணியை விட வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சாளர்கள் திணறல்

பந்துவீச்சாளர்கள் திணறல்

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் அனுபவ ஆண்டர்சன் தவிர மற்ற அனைவரும் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் திணறினர். ஆர்ச்சர், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஓவருக்கு 3 ரன்களுக்கும் அதிகமாக கொடுத்தனர்.

பிராடு நீக்கம் சரியா?

பிராடு நீக்கம் சரியா?

இந்தப் போட்டியில் ஆண்டர்சனுடன் பல ஆண்டுகளாக ஜோடியாக பந்து வீசி எதிரணிகளை திக்குமுக்காட வைத்து வந்த ஸ்டூவர்ட் பிராடை அணியில் இருந்து நீக்கி இருந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த பிராடு முக்கிய காரணமாக இருந்தார்.

முடிவு சரியா?

முடிவு சரியா?

அவரை நீக்கி விட்டு மார்க் வுட், ஆர்ச்சர் ஆகியோரை அணியில் தேர்வு செய்த ஸ்டோக்ஸ்-இன் முடிவு தவறாக சென்று விட்டதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். போட்டியின் முடிவில் தான் ஸ்டோக்ஸ் முடிவு சரியா, தவறா என தெரிய வரும்.

Story first published: Friday, July 10, 2020, 21:53 [IST]
Other articles published on Jul 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+