
இரண்டாவது டெஸ்ட்
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் படிங் செய்தது.

ஆமை வேக ஆட்டம்
அந்த அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த போது ஸ்டோக்ஸ், துவக்க வீரர் ஸிப்லியுடன் ஜோடி சேர்ந்து நிதான அட்ட, ஆடி அணியை மீட்டார். ஸ்டோக்ஸ் வழக்கத்தை விட நிதானமாக ஆடி 255 பந்துகளில் சதம் கடந்தார்.

இங்கிலாந்து முன்னிலை
ஸிப்லி 120 ரன்கள் எடுத்தார். ஸ்டோக்ஸ் 356 பந்துகளில் 176 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 469 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 287 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து திட்டம்
இங்கிலாந்து அணி 182 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிரடி ஆட்டம் ஆடி 300 ரன்கள் இலக்கை நிர்ணயிக்க முடிவு செய்தது. அதிரடி ஆட்டம் ஆட பென் ஸ்டோக்ஸ் - ஜோஸ் பட்லர் துவக்க வீரர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிரடி ஆட்டம்
பட்லர் டக் அவுட் ஆனாலும், ஸ்டோக்ஸ் அபாரமாக ஆடினார். 36 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை புரிந்தார். இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிவேக டெஸ்ட் அரைசதம் இதுவே. அவர் 57 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெ.இண்டீஸ் தடுமாற்றம்
இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 129 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 311 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது. டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிய அந்த அணி துவக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது.

10 ஓவர்கள் ஷார்ட் பால்
பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் முதல் இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 13 ஓவர்கள் பந்து வீசும் போது அசாதாரணமான காரியம் ஒன்றை செய்தார். அவர் வீசிய 13 ஓவர்களில் சுமார் 10 ஓவர்களுக்கு வெறும் ஷார்ட் பந்துகளை வீசி வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார்.

சிறந்த கிரிக்கெட் வீரர்
பென் ஸ்டோக்ஸ்-இன் இந்த பல்திறன் ஆட்டத்தை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இவர்தான் சிறந்த கிரிக்கெட் வீரர் என ஒரு மனதாக பாராட்டி வருகின்றனர். 2019 உலகக்கோப்பை வென்ற போதும் பென் ஸ்டோக்ஸ் தான் அதற்கு காரணம் என ரசிகர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நான்கு துவக்க வீரர்கள்
இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 1953க்குப் பின் இரண்டு இன்னிங்க்ஸ்களில் வெவ்வேறு துவக்க வீரர்களை பயன்படுத்தி உள்ளது. அதாவது ஒரே டெஸ்டில் நான்கு துவக்க வீரர்களை பயன்படுத்தி உள்ளது இங்கிலாந்து அணி. பென் ஸ்டோக்ஸ் முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











