Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாண்டிங், சங்ககாராவை பின்தள்ளி.. இங்கிலாந்துக்கு எதிராக சாதனை படைத்த கிறிஸ் கெயில்..!

Recommended Video

WORLD CUP 2019 ENG VS WI | ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் புதிய சாதனை ஒன்றை செய்து அசத்தியுள்ளார்.

கிறிஸ் கெயில் இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ் கெயில் தொடர்ந்து சாதனைகள் செய்து வருகிறார்.

ENG vs WI Cricket World cup 2019 : Chris Gayle most runs against England ODI record

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு துவக்க வீராரக இறங்கிய கிறிஸ் கெயில் 41 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

குறைவான ரன்களே அடித்து இருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக முக்கிய சாதனை ஒன்றை படைத்தார் கிறிஸ் கெயில். குறிப்பாக இந்த சாதனையில், ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ரிக்கி பாண்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ், குமார் சங்ககாரா ஆகிய மூன்று பேரின் சாதனைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக, இந்தப் போட்டிக்கு முன் வரை கிறிஸ் கெயில் 1596 ரன்கள் எடுத்து இருந்தார். அதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தார்.

இந்தப் போட்டியில் 36 ரன்கள் சேர்த்த கிறிஸ் கெயில் ஒட்டு மொத்தமாக 1632 ரன்கள் சேர்த்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் (1598 ரன்கள்), விவியன் ரிச்சர்ட்ஸ் (1619 ரன்கள்), குமார் சங்ககாரா (1625 ரன்கள்) ஆகியோரை முந்தி முதல் இடம் பிடித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் நிதானமாக பேட்டிங் செய்தார் கிறிஸ் கெயில். முதல் 15 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் தான் வேகமெடுத்தார். ஒரு சிக்ஸ், ஐந்து ஃபோர் அடித்து அசத்தினார். எனினும், தொடர்ந்து பெரிய அளவில் ரன் குவிக்காமல் 36 ரன்கள் மட்டுமே சேர்த்து லியாம் பிளங்கட் பந்தில் ஆட்டமிழந்தார்.

கெயில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த வீரர்களில் நிக்கோலஸ் பூரன் 63, ஷிம்ரான் ஹெட்மையர் 39 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Story first published: Friday, June 14, 2019, 20:27 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+