Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டது வெ.இண்டீஸ்.. பெரிய சிக்கலை சமாளித்த இங்கிலாந்து.. அபார வெற்றி!!

Recommended Video

WORLD CUP 2019 ENG VS WI | ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன போட்டியில் சொதப்பலாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் மோசமாக தோல்வி அடைந்தது.

தங்கள் அணிக்கு பேட்டிங்கில் ஏற்பட்ட சிக்கலை சிறப்பாக கையாண்ட இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரில் 19வது லீக் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. தங்களை நிரூபிக்க, சுயபரிசோதனை செய்து கொள்ள, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ்.

வெ.இண்டீஸ் பேட்டிங்

வெ.இண்டீஸ் பேட்டிங்

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் அதிரடி காட்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிறிஸ் கெயில் 36, நிக்கோலஸ் பூரன் 63, ஹெட்மயர் 39, ஆண்ட்ரே ரஸ்ஸல் 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இருவர் காயம்

இருவர் காயம்

வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் பீல்டிங்கின் போது அந்த அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் மற்றும் இயான் மார்கன் காலில் காயமடைந்தனர்.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இதனால், அவர்கள் இருவரும் பேட்டிங் ஆடுவது கடினம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங்கில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சில் கலக்கினால், எளிதாக வெற்றி பெறலாம் என ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்தனர்.

துவக்கம்

துவக்கம்

ஆனால், இங்கிலாந்து அணியை கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்க முடியாமல் தவித்தது வெஸ்ட் இண்டீஸ். ஜேசன் ராய் இல்லாத நிலையில், ஜோ ரூட் துவக்கம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் பேரிஸ்டோ 45 ரன்கள் குவித்தார்.

எதிர்பாரா வீரர்

எதிர்பாரா வீரர்

மூன்றாவது விக்கெட்டுக்கு யாருமே எதிர்பார்க்காத ஒரு வீரரை களமிறக்கியது இங்கிலாந்து. பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ்-ஐ களமிறக்கியது. அவர் பொதுவாக ஏழு, எட்டு வரிசையில் தான் பேட்டிங் செய்வார். இந்தப் போட்டியில் அவர் ஜோ ரூட்டுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து ஆடினார். அந்தக் கூட்டணி 104 ரன்கள் சேர்த்தது. வோக்ஸ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜோ ரூட் சதம்

ஜோ ரூட் சதம்

சிறப்பாக பேட்டிங் செய்து வந்த ஜோ ரூட் 93 பந்துகளில் சதம் கடந்தார். இறுதியில் பவுண்டரி அடித்த பென் ஸ்டோக்ஸ் அணியை வெற்றிக் கோட்டை எட்டச் செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிக சராசரியாக செயல்பட்டு, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Story first published: Friday, June 14, 2019, 22:23 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+