For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங் செய்யும் முன்னே 2 இங்கிலாந்து வீரர்கள் அவுட்.. போட்டியில் பரபரப்பு திருப்பம்! #ENGvsWI

Recommended Video

WORLD CUP 2019 ENG VS WI | ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தப் போட்டியில் இங்கிலாந்து எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு பேட்ஸ்மேன்கள் காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இதனால், இங்கிலாந்து எட்டு பேட்ஸ்மேன்களை கொண்டு பேட்டிங் செய்ய திட்டமிட்டு களமிறங்கியது.

தசைப்பிடிப்பு

தசைப்பிடிப்பு

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வந்த போது, 8வது ஓவரில் இடது காலில் தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்து துவக்க வீரர் ஜேசன் ராய் வெளியேறினார்.

பீல்டிங் செய்யவில்லை

பீல்டிங் செய்யவில்லை

அதன் பின் அவர் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆடி முடிக்கும் வரை பீல்டிங் செய்ய வரவில்லை. இது இங்கிலாந்து அணிக்கு விழுந்த முதல் அடி. அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டனுக்கு காயம் ஏற்பட்டது.

இயான் மார்கன் காயம்

இயான் மார்கன் காயம்

40வது ஓவரின் போது இயான் மார்கன் காலில் காயமடைந்து, நடக்க முடியாமல் விந்தி, விந்தி நடந்தார். உடனடியாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

8 விக்கெட்கள்

8 விக்கெட்கள்

காயமடைந்த இரண்டு வீரர்களும் மீண்டும் பேட்டிங் செய்வார்களா? என்பது தெரியாமல் சேஸிங் செய்யத் துவங்கியது இங்கிலாந்து. அந்த அணிக்கு சிறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், அந்த அணி இரண்டு பேட்ஸ்மேன்களை இழந்து, வெறும் எட்டு விக்கெட்களோடு போட்டியில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

சிக்கல்

சிக்கல்

ஒருவேளை காயமடைந்த இரு வீரர்களும் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தாலும், அதில் ஒரு சிக்கல் உள்ளது. ஜேசன் ராய் போட்டி துவங்கிய சில நிமிடங்களில் காயமடைந்து வெளியேறினார். அதன் பின் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அதனால், விதிப்படி அவர் ஏழு விக்கெட்கள் வீழ்ந்த பின்னரே மீண்டும் பேட்டிங் செய்ய வர முடியும்.

மார்கன் எப்போது இறங்கலாம்?

மார்கன் எப்போது இறங்கலாம்?

அதே போல இயான் மார்கன், வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து முடிக்க 28 நிமிடங்கள் இருக்கும் போது களத்தை விட்டு வெளியேறினார். அதனால், அவர் மீண்டும் 28 நிமிடங்கள் கழித்தே பேட்டிங் செய்ய களமிறங்கலாம்.

ஜோ ரூட் துவக்கம்

ஜோ ரூட் துவக்கம்

ஒருவேளை இங்கிலாந்து அணி துவக்கத்தில் இரண்டு விக்கெட்களை இழந்து விட்டால், நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து வரும் இயான் மார்கன், களமிறங்க முடியாது. துவக்க வீரர் ஜேசன் ராய் காயமடைந்த நிலையில், ஜோ ரூட் அவருக்கு பதில் துவக்க வீரராக களமிறங்கினார்.

Story first published: Friday, June 14, 2019, 19:57 [IST]
Other articles published on Jun 14, 2019
English summary
ENG vs WI Cricket World cup 2019 : Eoin Morgan and Jason Roy injured. England batting line up is under trouble.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+