Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரையா வேணாம்னு சொன்னீங்க? வெறும் 7 போட்டியில் யாருமே செய்யாத சாதனையை செய்த ஜோப்ரா ஆர்ச்சர்!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வெறும் 7 போட்டிகளே ஆடி இருக்கும் நிலையில், வேறு எந்த இங்கிலாந்து பந்துவீச்சாளரும் செய்யாத உலகக்கோப்பை சாதனையை செய்து அசத்தி இருக்கிறார்.

இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடருக்கு ஒரு வருடம் முன்பு இருந்தே பலமான அணியாகவே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் அளவுக்கு யாரும் இல்லை.

ENG vs WI Cricket World cup 2019 : Jofra Archer new record for England in world cup

உலகக்கோப்பைக்கு சில மாதம் முன்பு வரை இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால், தொடர்ந்து விக்கெட் எடுக்கவோ, மற்ற அணிகளை பயமுறுத்தும் வகையிலோ அது இல்லை. அப்போது தான் வந்து சேர்ந்தார் ஜோப்ரா ஆர்ச்சர்.

ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளை சேர்ந்தவர். எனினும், தங்கள் நாட்டில் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்க முடியாது என நினைத்த ஆர்ச்சர், இங்கிலாந்து நாட்டுக்கு புலம் பெயர்ந்தார். இங்கிலாந்து நாட்டின் விதிப்படி அவர் சில ஆண்டுகள் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார்.

அவர் சிறப்பாக பந்து வீசினாலும், விதிகளின் காரணமாக அவரை தேசிய அணியில் சேர்க்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு முன் அவரது காத்திருப்பு காலம் முடிந்தது. அதனால், அவர் உலகக்கோப்பை போட்டிகளில் தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடி இருக்காத ஒரு வீரரை எப்படி உலகக்கோப்பை தொடருக்கு எடுக்க முடியும் என சில கலகக் குரல்கள் இங்கிலாந்து அணியில் எழுந்தன. முன்னாள் வீரர்கள் கடுமையாக இதை எதிர்த்தனர்.

சர்வதேச அனுபவம் பெற்ற பல வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில், இவரை நேரடியாக அணியில் சேர்க்க முடியாது என கூக்குரல் இட்டனர். ஆனால், ஜோப்ரா ஆர்ச்சரை உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்கள் முன்பு நடந்த அயர்லாந்து ஒருநாள் தொடரிலும், பாகிஸ்தான் தொடரிலும் ஆட வைத்தனர்.

அந்த தொடர்களில் மூன்று போட்டிகளில் ஆடி, மூன்று விக்கெட்கள் எடுத்தார். அதன் பின் அவருக்கு எதிர்ப்புகள் ஓரளவு குறைந்தது. எனினும், சிறு சலசலப்பு அணியில் இருந்தது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து ஆடிய நான்கு போட்டிகளிலும் அணியில் இடம் பெற்றார்.

அதில் இங்கிலாந்து தோல்வி அடைந்த பாகிஸ்தான் போட்டி தவிர. மற்ற மூன்று போட்டிகளிலும் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் ஆர்ச்சர். இதன் மூலம், ஒரே உலகக்கோப்பை தொடரில் மூன்று இன்னிங்க்ஸ்களில் தலா 3 விக்கெட்கள் வீழ்த்திய ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவரை ஏன் இங்கிலாந்து அணியில் எடுத்தார்கள் என பலரும் கேள்வி கேட்ட நிலையில், வெறும் ஏழே போட்டிகளில் அவர்களுக்கு தன் திறமையின் மூலம் பதில் அளித்துள்ளார் ஆர்ச்சர்.

Story first published: Friday, June 14, 2019, 22:39 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+