Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க மேட்ச்ல மட்டும் மழை வராதா? இது கள்ள ஆட்டம்.. பிளான் பண்ண மாதிரி இருக்கு.. பொங்கிய ரசிகர்கள்!

Recommended Video

WORLD CUP 2019 ENG VS WI | ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

சவுதாம்ப்டன் : 2019 உலகக்கோப்பை என்றாலே மழை தான் இனி நினைவுக்கு வரும் என்கிற அளவுக்கு இந்த தொடரை மழை வைத்து செய்து விட்டது.

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள பத்து அணிகளில் ஒன்பது அணிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு அணி மட்டும் மழையில் இருந்து தப்பித்து வருகிறது.

ENG vs WI Cricket World cup 2019 : No rain interfering England matches

அது உலகக்கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி என்பதால் ரசிகர்கள் என்னமோ நடக்குது? என தங்கள் சந்தேகத்தையும், பொறாமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடப்பு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் தற்போது வெயில் காலம் என கூறப்பட்டாலும், நாடு முழுவதும் மழைக் காலம் போல வெகுவாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரிலும் சில போட்டிகளில் மழை குறுக்கிடலாம் என கருதப்பட்டது. ஆனால், இதுவரை நான்கு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டு இருக்கிறது. அது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

முதலில் பாகிஸ்தான் - இலங்கை போட்டி ஜூன் 7 அன்று மழையால் கைவிடப்பட்டது. அதே போல, ஜூன் 10இல் தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஏழு ஒவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், கைவிடப்பட்டது.

அடுத்து ஜூன் 11 அன்று வங்கதேசம் - இலங்கை, ஜூன் 13 அன்று இந்தியா - நியூசிலாந்து போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டன. இப்படி பல அணிகளும் மழையால் போட்டி கைவிடப்பட்டும், ஓவர்கள் குறைக்கப்பட்டும், போட்டி தாமதமாகியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், போட்டியை நடத்தும் இங்கிலாந்து மட்டும் எந்த போட்டியிலும் தடை இன்றி திட்டமிட்டவாறு விளையாடி வருகிறது. அது தான் மற்ற நாட்டு ரசிகர்களுக்கு பொறாமை வர வைத்துள்ளது.

அது எப்படி இங்கிலாந்து போட்டிக்கு மட்டும் மழை வரவில்லை. இது ஏதோ திட்டமிட்டது போல இருக்கிறது என்றும், இங்கிலாந்து போட்டிக்கு மழை வரக் கூடாது என கடவுளே பிளான் பண்ணி ஸ்க்ரிப்ட் எழுதி இருக்கிறார் என்றும் கூறி பொங்கி இருக்கிறார்கள் சில ரசிகர்கள்.

Story first published: Friday, June 14, 2019, 21:20 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+