Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப தப்பா போய்கிட்டு இருக்கு.. அந்த தம்பியை டீமை விட்டு தூக்குங்க! ஜாம்பவான் வீரர் கடும் விமர்சனம்

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷாய் ஹோப் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் படுமோசமாக செயல்பட்டு வருகிறார்.

Recommended Video

IPL 2020 Could Start From September 19

அவரது மோசமான செயல்பாடுகள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஷாய் ஹோப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ்.

இரண்டு சதங்கள்

இரண்டு சதங்கள்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் கடந்த 2017இல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் ஒன்றில் ஒரே போட்டியில் இரண்டு சதங்கள் அடித்தார். அப்போது பெரும் பிரபலம் அடைந்தார். அவரால், அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிவெற்றி பெற்று இருந்தது.

டெஸ்ட் பார்ம்

டெஸ்ட் பார்ம்

அதன் பின் ஒருநாள் போட்டிகளில் அணியில் முக்கிய வீரராக, நம்பகமான வீரராக மாறினார் ஹோப். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் செய்யவில்லை. 2018 முதல் இப்போது வரை அவர் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

பேட்டிங் சராசரி சரிவு

பேட்டிங் சராசரி சரிவு

அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 2௦17இல் 47இல் இருந்தது. தற்போது 20களில் உள்ளது. அந்த அளவிற்கு மோசமாக ஆடி வருகிறார். இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம்.

மோசமான பார்ம்

மோசமான பார்ம்

தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் எடுத்த ரன்கள் - 25, 7, 16, 9 மட்டுமே. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.

நம்பிக்கையின்மை

நம்பிக்கையின்மை

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் கூறுகையில், அவர் சிறந்த வீரர். ஆனால், அவர் இப்போது ஆடுவது அவரின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. அடுத்த போட்டியில் அவருக்கு நாம் ஓய்வு அளிக்க வேண்டும். அதன் மூலம் அவர் நம்பிக்கையை பெறுவார் என்றார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அவரை தொடர்ந்து ஆட வைத்து, அவர் தொடர்ந்து மோசமாக ஆடிக் கொண்டு இருந்தால் நிலைமை மோசம் ஆகும். இது தொடர்ந்தால் நீங்கள் அவரை அழித்து விடுவீர்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எச்சரிக்கை விடுத்தார் ஆம்ப்ரோஸ்.

கடினமான முடிவு

கடினமான முடிவு

மேலும், ஹெடிங்லேவில் அடித்த இரண்டு சதங்களுக்கு பின் ஏதோ தவறாக போய்விட்டது. அதன் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒன்றுமே செய்யவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அவரை தொடர்ந்து தேர்வு செய்யப் போகிறதா? இது கடினமான முடிவு என்றார்.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 24 அன்று துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் ஷாய் ஹோப் இடம் பெற வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது. ஹோப் மீதான விமர்சனம் அதிகரித்து வருவதும் அதற்கு முக்கிய காரணம்.

Story first published: Wednesday, July 22, 2020, 11:15 [IST]
Other articles published on Jul 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+