For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செய்யக் கூடாத விஷயத்தை செய்த இங்கிலாந்து வீரர்.. படம் போட்டு காட்டிக் கொடுத்த டிவி.. பரபர சம்பவம்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் டொமினிக் ஸிப்லி விதிமீறலில் ஈடுபட்டார்.

Recommended Video

ENG vs WI , 2nd Test, Day 4 | England lead by 219 runs

தொலைக்காட்சி ஒளிபரப்பில் அவர் செய்த தவறு மீண்டும் சுட்டிக் காட்டப்பட்டது. உடனே இங்கிலாந்து அணி அம்பயரிடம் விதிமீறலை தானே ஒப்புக் கொண்டது.

இந்த சம்பவம் போட்டியின் இடையே பரபரப்பை கிளப்பியது. பின்னர் அம்பயர் கிருமி நாசினியை கொண்டு பந்தை சுத்தம் செய்தார்.

முதல் சர்வதேச தொடர்

முதல் சர்வதேச தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே நடைபெற்று வருகிறது. சுமார் 117 நாட்களுக்கு பின் இந்த தொடர் தான் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமைந்தது.

விதிமுறைகள்

விதிமுறைகள்

கடந்த மார்ச் 13க்குப் பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு கடும் முயற்சி எடுத்து, கடும் விதிமுறைகளை அமல்படுத்தி இந்த டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அரசிடம் ஒப்புதல் வாங்கியது.

ஐசிசி முன்னெச்சரிக்கை

ஐசிசி முன்னெச்சரிக்கை

மறுபுறம் ஐசிசி அமைப்பும், கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில் முக்கியமானது பந்தின் மீது எச்சில் பயன்படுத்தக் கூடாது என்பது.

டொமினிக் ஸிப்லி

டொமினிக் ஸிப்லி

அதைத் தான் மீறினார் இங்கிலாந்து வீரர் டொமினிக் ஸிப்லி. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் அவர் சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 469 ரன்கள் குவித்து இருந்தது.

என்ன செய்தார்?

என்ன செய்தார்?

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடி வந்தது. அப்போது நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன் 41வது ஓவரில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டொமினிக் ஸிப்லி தன்னை மறந்து பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்த்தார்.

இங்கிலாந்து அணி ஒப்புதல்

இங்கிலாந்து அணி ஒப்புதல்

அவர் பந்தின் மீது எச்சிலை பயன்படுத்திய காட்சி சில நிமிடங்கள் கழித்து தொலைக்காட்சி ஒளிபரப்பில் மீண்டும் காட்டப்பட்டது. அதை கண்ட இங்கிலாந்து அணி உடனடியாக இந்த விதிமீறலை தானே அம்பயரிடம் எடுத்துச் சென்றது.

கிருமி நாசினி

கிருமி நாசினி

42வது ஓவரின் முன் அம்பயர்கள் பந்தை சோதனை செய்தனர். பின்னர் கிருமி நாசினி கொண்டு பந்தை சுற்றிலும் துடைத்தனர். அதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. பின் மீண்டும் போட்டி தொடர்ந்தது. எனினும், அம்பயர்கள் இங்கிலாந்து அணியை எச்சரிக்கை செய்தார்களா? என்பது தெரியவில்லை.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஐசிசி-யின் புதிய விதிப்படி பந்தில் எச்சில் பயன்படுத்தினால் விதி மீறலில் ஈடுபட்ட அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பின் மீண்டும் இது தொடர்ந்தால் 5 ரன்கள் பெனால்ட்டி வழங்கப்படும். ஸிப்லி செய்த விதிமீறலுக்கு இங்கிலாந்து அணியை அம்பயர் எச்சரிக்கை செய்தாரா? என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுவே முதல்முறை

இதுவே முதல்முறை

சர்வதேச போட்டிகளில் முதன்முறையாக ஒரு வீரர் எச்சில் பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதே தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விதியை மீறி தன் வீட்டிற்கு சென்று வந்து சிக்கினார். அவர் தற்போது தனிமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 20, 2020, 12:13 [IST]
Other articles published on Jul 20, 2020
English summary
ENG vs WI : Dominic Sibley used Saliva and Umpire sanitsed the ball.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+