Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு வெ.இண்டீஸ்.. உஷாரான இங்கிலாந்து.. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

Recommended Video

Eng VS WI 1st Test Day 3 | Windies on top in 1st innings

இரு அணிகளில் யார் வெல்வார்கள்? என்பதை தாண்டி போட்டி டிரா ஆகுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் இன்னிங்க்ஸில் 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் நிலைத்து ஆடி வருகிறது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. முதல் நாள் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

பேட்டிங்கில் கோட்டை விட்டது

பேட்டிங்கில் கோட்டை விட்டது

இந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்குள் வெற்றி - தோல்வியை காண இரு அணிகளும் போராடத் துவங்கின. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங்கில் கோட்டை விட்டது. 204 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

318 ரன்கள்

318 ரன்கள்

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் குவித்தது. பிராத்வைட் 65, ராஸ்டன் சேஸ் 47, டவ்ரிச் 61 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய அளவில் உதவினர். முதல் இன்னிங்க்ஸில் அந்த அணி 114 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாம் இன்னிங்க்ஸ்

இரண்டாம் இன்னிங்க்ஸ்

இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது. மூன்றாம் நாள் இறுதியில் விக்கெட் இழப்பின்றி இருந்தது. இந்த நிலையில், நான்காம் நாள் துவக்கத்தில் ரன் சேர்த்த பர்ன்ஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். சிப்லி மற்றும் டென்லி தொடர்ந்து பேட்டிங் செய்து வந்தனர்.

கடைசி நாள் ஆட்டத்தில்..

கடைசி நாள் ஆட்டத்தில்..

இங்கிலாந்து அணி 48 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. நான்காம் நாளுக்குள் இங்கிலாந்து அணி 350 ரன்களை எட்டினால், கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற முடியும்.

டிரா ஆக வாய்ப்பு

டிரா ஆக வாய்ப்பு

எனினும், இங்கிலாந்து அணி மந்தமாகவே ஆடி வருகிறது. அதனால், விக்கெட் இழக்காமல் ஆடினால் ஐந்தாம் நாள் வரை இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடும். அப்படி நடக்கும் பட்சத்தில் போட்டி டிரா ஆக வாய்ப்பு உள்ளது.

மழை

மழை

ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவாக விக்கெட்களை வீழ்த்தி 200 ரன்களுக்கும் குறைவான வெற்றி இலக்கை பெற்றால், அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. மழை குறுக்கிட்டாலும் இந்தப்ப் போட்டி டிராவில் முடியக் கூடும்.

Story first published: Saturday, July 11, 2020, 21:09 [IST]
Other articles published on Jul 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+