Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி!

சௌதாம்ப்டன் : முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

Eng vs WI 1st test | Reasons for England loss

இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி விரைவாக 3 விக்கெட்கள் வீழ்த்தியது.

எனினும், பிளாக்வுட் அபார ஆட்டம் ஆடி சேஸிங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாக மாற்றி வெற்றி தேடித் தந்தார்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளன. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் நாள் ஆட்டம்

முதல் நாள் ஆட்டம்

மழையால் போட்டி தாமதமாக துவங்கியது, இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்க்சில் புரட்டி எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.

விக்கெட் அள்ளிய வெ.இண்டீஸ்

விக்கெட் அள்ளிய வெ.இண்டீஸ்

இங்கிலாந்து அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்ரியல் 4, ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் குவித்தது.

வெ.இண்டீஸ் ரன் குவிப்பு

வெ.இண்டீஸ் ரன் குவிப்பு

கார்லோஸ் பிராத்வைட் 65, ராஸ்டன் சேஸ் 47, டவ்ரிச் 61 ரன்கள் சேர்த்தனர். ஆண்டர்சன் 3, ஸ்டோக்ஸ் 4, வுட் 1, பெஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது இங்கிலாந்து அணி. 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் செய்தது அந்த அணி.

சரிவு

சரிவு

இரண்டாம் இன்னிங்க்ஸில் சுதாரித்த இங்கிலாந்து அணி 249 ரன்களுக்கு 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து நம்பிக்கை அளித்து வந்தது. ஆனால், அதன் பின் 30 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது.

வெற்றி இலக்கு

வெற்றி இலக்கு

இரண்டாம் இன்னிங்க்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 313 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யபப்ட்டது. முதல் இன்னிங்க்ஸில் விக்கெட் வீழ்த்தாமல் விமர்சனத்துக்கு உள்ளான ஆர்ச்சர் இந்த இன்னிங்க்ஸில் கலக்கினார்.

பிளாக்வுட் - சேஸ் கூட்டணி

பிளாக்வுட் - சேஸ் கூட்டணி

அவர் தான் வீசிய முதல் 5 ஓவர்களுக்குள் 2 விக்கெட்களை வீழ்த்த, வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. எனினும், அதன் பின் பிளாக்வுட் - சேஸ் இணைந்து கூட்டணி அமைத்தனர். சேஸ் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பிளாக்வுட் 95

பிளாக்வுட் 95

பிளாக்வுட் நீண்ட நேரம் பொறுப்பாக நின்று ஆடி வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை வரை வெஸ்ட் இண்டீஸ் அணியை எடுத்துச் சென்றார். 95 ரன்கள் சேர்த்த அவர் சதம் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.

வெ.இண்டீஸ் வெற்றி

வெ.இண்டீஸ் வெற்றி

கேம்பல் - ஹோல்டர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் விருது

முதல் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்கள், இரண்டாம் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் என 9 விக்கெட்கள் வீழ்த்திய ஷனான் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் அணி கேப்டனாக தன் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார்.

Story first published: Sunday, July 12, 2020, 23:16 [IST]
Other articles published on Jul 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+