For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோற்று இருந்தாலும் பரவாயில்லை.. கெத்தாக முடிவு எடுத்த வெ.இண்டீஸ்.. ஆமை வேகத்தில் நகரும் இங்கிலாந்து!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் துவங்கியது.

Recommended Video

Eng vs WI 3rd Day 1 : Pope and Buttler to the rescue

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்து ஆச்சரியம் அளித்தது.

இங்கிலாந்து அணி மிகவும் நிதான ஆட்டம் ஆடி துவக்கத்தில் தட்டுத்தடுமாறியது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று உள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இரண்டாவது டெஸ்ட் போட்டியும் மான்செஸ்டர் மைதானத்தில் தான் நடைபெற்றது. அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்டிலும் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து அதிர் வைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப்புக்கு பதில் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ரக்கீம் கார்ன்வால் சேர்க்கப்பட்டு இருந்தார். இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடத் துவங்கியது. ரோரி பர்ன்ஸ் - டொமினிக் ஸிப்லி துவக்கம் அளித்தனர்.

ஸிப்லி ஏமாற்றம்

ஸிப்லி ஏமாற்றம்

துவக்க வீரர் ஸிப்லி கடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இருந்த நிலையில், இந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து பர்ன்ஸ் - கேப்டன் ஜோ ரூட் இணைந்து ஆடினர். இருவரும் படு நிதான ஆட்டம் ஆடி வந்தனர்.

ஜோ ரூட் ரன் அவுட்

ஜோ ரூட் ரன் அவுட்

59 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். நிதான ஆட்டம் ஆடுகையில் ஏன் தேவையில்லாமல் ரன் ஓடி அவுட் ஆனார் என இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.

ஸ்டோக்ஸ்-ஐ நம்பி இருக்கும் இங்கிலாந்து

ஸ்டோக்ஸ்-ஐ நம்பி இருக்கும் இங்கிலாந்து

22வது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மீண்டும் ஸ்டோக்ஸ்-ஐ நம்பி இருக்கிறது இங்கிலாந்து. ஸ்டோக்ஸ் விக்கெட்டை எடுத்தால் போட்டியில் திருப்பம் ஏற்படும் என வெஸ்ட் இண்டீஸ் அணி முயற்சி செய்து வருகிறது.

Story first published: Friday, July 24, 2020, 20:27 [IST]
Other articles published on Jul 24, 2020
English summary
ENG vs WI : England vs West Indies 3rd test day 1 update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+