Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம அடி.. 200 ரன்களைக் கூடத் தாண்டாத வெ.இண்டீஸ்.. தனியாளாக காலி செய்த இங்கிலாந்து பவுலர்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமான நிலையில் உள்ளது.

Recommended Video

ENG VS WI 3RD TEST , DAY 3 | England closing in on series victory

முதல் இன்னிங்க்ஸில் அந்த அணி 172 ரன்கள் பின்தங்கியது. இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

ஸ்டூவர்ட் பிராடு பேட்டிங்கில் அசத்தியதோடு, பந்துவீச்சிலும் 6 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார்.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி துவக்கத்தில் தடுமாறினாலும், மிடில் ஆர்டரில் போப், பட்லர் சிறப்பாக ஆடினர்.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

துவக்க வீரர் பர்ன்ஸ் 57, போப் 91, பட்லர் 67 ரன்கள் குவித்தனர். ஸ்டூவர்ட் பிராடு பத்தாம் வரிசையில் பேட்டிங் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். 33 பந்துகளில் அரைசதம் கடந்து அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடமும் பிடித்தார்.

வெ.இண்டீஸ் பந்துவீச்சு

வெ.இண்டீஸ் பந்துவீச்சு

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் எடுத்தது. கீமர் ரோச் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். கேப்ரியல் 2, சேஸ் 2, ஹோல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது.

விக்கெட்டை இழந்து வந்தது

விக்கெட்டை இழந்து வந்தது

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் பெரிய அளவில் ரன் குவித்தால் மட்டுமே இந்த போட்டியை வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், துவக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தது.

ஆண்டர்சன் - பிராடு

ஆண்டர்சன் - பிராடு

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேம்பல் 32, ஹோல்டர் 46, பிளாக்வுட் 26, டவ்ரிச் 37 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே சேர்த்தனர். ஆண்டர்சன் - பிராடு ஜோடியின் வேகப் பந்துவீச்சை எடிர்க்ள்ள எதிர்கொள்ள முடியாமல் தவித்தது வெஸ்ட் இண்டீஸ்.

6 விக்கெட் வீழ்த்திய பிராடு

6 விக்கெட் வீழ்த்திய பிராடு

65 ஓவர்களில் 197 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது அந்த அணி. பிராடு 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆண்டர்சன் 2, ஆர்ச்சர் 1, கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 172 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்துக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு வாய்ப்பு

இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தாலே இந்தப் போட்டியில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். வெஸ்ட் இண்டீஸ் அணி 350 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை எட்டுவது கடினம் என்பதால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

Story first published: Wednesday, July 29, 2020, 11:33 [IST]
Other articles published on Jul 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+