Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

33 பந்தில் 50.. வெறியாட்டம் ஆடிய பிராடு.. ஆனாலும் இங்கிலாந்து திட்டத்தை உடைத்த வெ.இண்டீஸ்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தை முடித்துள்ளது.

முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து அணி. முதல் நாள் பந்துவீச்சில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் விக்கெட்களை அள்ளியது.

எனினும், ஸ்டூவர்ட் பிராடு மின்னல் வேகத்தில் அரைசதம் கடந்து இங்கிலாந்து அணியை ஓரளவு நிலையான ஸ்கோரை எடுக்கச் செய்தார்.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் துவக்கத்தில் தடுமாறியது. இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்த துவக்க வீரர் டொமினிக் ஸிப்லி டக் அவுட் ஆனார்.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

கேப்டன் ஜோ ரூட் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகி ஏமாற்றினார். நம்பிக்கை நாயகன் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த போப், பட்லர் அணியை மீட்டனர். முதல் நாள் 258 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து இருந்தது இங்கிலாந்து அணி.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தியது. போப் 91, பட்லர் 67, வோக்ஸ் 1, ஆர்ச்சர் 3 ரன்கள் எடுத்து வரிசையாக வெளியேறினர். ஆனால், ஸ்டூவர்ட் பிராடு பத்தாம் வரிசையில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார்.

பிராடு அதிரடி

பிராடு அதிரடி

பிராடு 33 பந்துகளில் அரைசதம் கடந்து மிரள வைத்தார். 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார் அவர். ஆண்டர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியால் 400 ரன்கள் எடுக்க முடியவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ரோச் 4 விக்கெட்கள் சாய்த்தார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 50 ஓவர்களாக விக்கெட் வீழ்த்தாமல் இருந்த கேப்ரியல் 2 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர் 1, சேஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

திட்டம் நிறைவேறவில்லை

திட்டம் நிறைவேறவில்லை

முதல் இன்னிங்க்ஸில் 400 ரன்கள் எடுக்கலாம் என்ற இங்கிலாந்து அணியின் திட்டத்தை தடுத்து நிறுத்தியது வெஸ்ட் இண்டீஸ். ஆனால், பிராடு ஆட்டத்தால் ஓரளவு தப்பித்தது இங்கிலாந்து அணி. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

Story first published: Saturday, July 25, 2020, 20:20 [IST]
Other articles published on Jul 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+