Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

Recommended Video

Eng VS WI 1st Test Day 2 | England All out For 204

முதல் நாள் ஆட்டம் மழையால் பெரும்பாலும் தடைபட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இரண்டாம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்து அணி டாப் ஆர்டரை இழந்து தவித்தது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. போட்டியின் முதல் நாள் மழை பெய்தது.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

மழையால் டாஸ் போட முடியாத நிலை நீடித்தது. பின் மழை நின்ற பின் போட்டி மூன்று மணி நேரம் தாமதமாக துவங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. போட்டியில் 17.4 ஓவர்களே வீசிய நிலையில் மீண்டும் மழை பெய்தது.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

அதை அடுத்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் திட்டமிட்ட நேரத்தில் துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாளே ஒரு விக்கெட் சாய்த்த நிலையில், இரண்டாம் நாள் விக்கெட் வேட்டையை தொடர்ந்தது.

அச்சுறுத்தும் பந்துவீச்சு

அச்சுறுத்தும் பந்துவீச்சு

வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமார்ரோச் மற்றும் ஜேசன் ஹோல்டர் அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினர். அவர்கள் பந்துவீச்சை சமாளிக்கவே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.

கேப்ரியல் அசத்தல்

கேப்ரியல் அசத்தல்

மறுபுறம் ஷானான் கேப்ரியல் விக்கெட் வேட்டை நடத்தினார். அவர் 3 விக்கெட்கள் சாய்க்க, ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 106 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து இருந்தது.

நம்பிக்கை

நம்பிக்கை

இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். அவருடன் பட்லர் இணைந்து பேட்டிங் செய்து வருகிறார். இங்கிலாந்து அணி 130 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது. இங்கிலாந்து அணி 200 ரன்கள் எடுத்தால் கூட போட்டியில் முன்னிலை பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, July 9, 2020, 21:37 [IST]
Other articles published on Jul 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+