Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பான முடிவு எடுத்த வெ.இண்டீஸ் கேப்டன்.. கடும் சோதனை.. போட்டுத் தாக்கிய ஸிப்லி, ஸ்டோக்ஸ்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கை ஓங்கி உள்ளது.

Recommended Video

ENG vs WI 2nd Test, Day 2 | Stokes, Sibley slams tons

வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டாஸ் வென்றும் தவறான முடிவு எடுத்துவிட்டதாக தற்போது விமர்சனமும் எழுந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சோதனைக்கு உள்ளாக்கியது இங்கிலாந்தின் ஸிப்லி - பென் ஸ்டோக்ஸ் ஜோடி.

இரண்டாவது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இரண்டாவது டெஸ்டில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்றார். முதலில் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் தடுமாற்றம்

முதலில் தடுமாற்றம்

வேகப் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், சுழற் பந்துவீச்சாளர் ராஸ்டன் சேஸ் உணவு இடைவேளைக்கு முன்பும், பின்பும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை சாய்த்து அசத்தினார். அல்சாரி ஜோசப் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

எடுபடாத வேகப் பந்துவீச்சு

எடுபடாத வேகப் பந்துவீச்சு

அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணியால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. வேகப் பந்துவீச்சாளர்களால் எந்த வகையிலும் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியவில்லை. துவக்க வீரர் ஸிப்லி, பென் ஸ்டோக்ஸ் இணைந்து போட்டியை இங்கிலாந்து வசம் எடுத்துச் சென்றனர்.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

81 ரன்களுக்கு 3 விக்செட்களை இழந்த இங்கிலாந்து அணி பின்னர் ஸிப்லி- ஸ்டோக்ஸ் கூட்டணியால் 250 ரன்களை கடந்துள்ளது. ஸிப்லி அபாரமாக ஆடி சதம் கடந்தார். இது அவரது இரண்டாவது டெஸ்ட் சதம் ஆகும். இந்த கூட்டணி 150 ரன்களை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

தவறான முடிவா?

தவறான முடிவா?

வெஸ்ட் இண்டீஸ் அணிகேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸில் தவறான முடிவை எடுத்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் ஆடி இருந்தால் இங்கிலாந்து திணறி இருக்கக் கூடும். அந்த வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

ஸிப்லி - ஸ்டோக்ஸ்

ஸிப்லி - ஸ்டோக்ஸ்

106 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 96, ஸிப்லி 101 ரன்கள் குவித்து ஆடி வருகின்றனர். இன்னும் நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் இங்கிலாந்து பெரிய அளவில் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, July 17, 2020, 18:31 [IST]
Other articles published on Jul 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+