Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படியாவது டிரா பண்ணனும்.. திக் திக் ஆட்டம்.. போராடும் வெ.இண்டீஸ்.. இங்கிலாந்து நிலை இதுதான்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் டிராவுக்கும், வெற்றிக்கும் இடையே ஆன போராட்டமாக மாறி உள்ளது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 300 ரன்களுக்கும் மேல் பின்தங்கிய நிலையில் ஆடி வருகிறது.

நான்காம் நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், இன்னும் இரண்டு இன்னிங்க்ஸ்கள் மீதமுள்ளதால் போட்டி டிரா ஆக வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்ற முடியும்.

பந்துவீச்சு தேர்வு

பந்துவீச்சு தேர்வு

தொடரை வெல்ல வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் சிறப்பாக ஆடி பெரிய அளவில் ரன் குவித்தது. டொமினிக் ஸிப்லி 120, பென் ஸ்டோக்ஸ் 176 ரன்கள் குவித்தனர். முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 469 ரன்கள் குவித்தது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்யத் துவங்கியது.

மழை

மழை

இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழந்து ஆடி வந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் அந்த நாளின் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், நான்காம் நாள் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது வெஸ்ட் இண்டீஸ்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

துவக்க வீரர் கிரைக் பிராத்வைட் அரைசதம் அடித்து தொடர்ந்து ஆடினார். நைட் வாட்ச்மேனாக வந்த அல்சாரி ஜோசப் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹோப் 25 ரன்கள் எடுத்தார். ப்ரூக்ஸ், பிராத்வைட் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

வெ.இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸ்

வெ.இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி 156 ரன்கள் எடுத்து 3 விக்கெட் இழந்துள்ளது. நான்காம் நாளில் 50 ஓவர்களுக்கும் மேல் மீதமுள்ளது. ஐந்தாம் நாள் ஆட்டமும் உள்ளது. இந்த ஒன்றரை நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 விக்கெட்களை வைத்து டிரா செய்ய முயற்சித்து வருகிறது.

இங்கிலாந்து நிலை

இங்கிலாந்து நிலை

மறுபுறம் இங்கிலாந்து அணி தொடரை வெல்ல விரைவாக இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்களை வேட்டையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, குறிப்பாக பாலோ ஆன் கொடுக்கும் அளவுக்கு வேகமாக முதல் இன்னிங்க்ஸில் விக்கெட் வீழ்த்த வேண்டும்.

டிரா ஆக வாய்ப்பு

டிரா ஆக வாய்ப்பு

இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது சற்று கடினம் என்றே கருதப்படுகிறது. எனினும், ஐந்தாம் நாள் தான் போட்டியை முடிவு செய்யும் நாளாக இருக்கும். மழை குறுக்கிட்டாலும் இந்தப் போட்டி டிராவை நோக்கியே செல்லும்.

Story first published: Sunday, July 19, 2020, 20:34 [IST]
Other articles published on Jul 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+