For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திட்டம் போட்டு காலி செய்த இங்கிலாந்து.. போராடித் தோற்ற வெ.இண்டீஸ்.. பரபர டெஸ்ட் மேட்ச்!

மான்செஸ்டர் : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து.

Recommended Video

ENG VS WI 2nd Test | England won by 113 runs

இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.

என்கனி தெளிவாக திட்டமிட்டு இந்தப் போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1 - 1 என சமன் செய்தது.

வெ.இண்டீஸ் முன்னிலை

வெ.இண்டீஸ் முன்னிலை

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 - 0 என முன்னிலையில் இருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் துவங்கியது. இங்கிலாந்து அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் ஆடியது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து தவறு செய்தது. முதல் நாள் விக்கெட் வீழ்த்த கடினமான சூழல் நிலவியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 469 ரன்கள் குவித்தது.

சதங்கள்

சதங்கள்

இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் டொமினிக் ஸிப்லி 120, பென் ஸ்டோக்ஸ் 176 ரன்கள் குவித்தனர். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யத் துவங்கியது. மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் தடைபட்டது.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸ்

இந்த நிலையில், நான்காம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 287 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பிராத்வைட் 75, ப்ரூக்ஸ் 68, ராஸ்டன் சேஸ் 51 ரன்கள் எடுத்தனர். முதல் போட்டியில் 95 ரன்கள் எடுத்த பிளாக்வுட் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இங்கிலாந்து திட்டம்

இங்கிலாந்து திட்டம்

182 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி விரைவில் ரன் குவித்து ஐந்தாம் நாள் 300 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெற திட்டம் போட்டது. அதன்படி ஸ்டோக்ஸ், பட்லர் துவக்க வீரர்களாக அனுப்பப்பட்டனர்.

பென் ஸ்டோக்ஸ் அதிரடி

பென் ஸ்டோக்ஸ் அதிரடி

பட்லர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி 57 பந்துகளில் 78 ரன்கள் குவித்து, குறைந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க காரணமாக இருந்தார். இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 129 ரன்கள் குவித்தது.

கடைசி நாள் ஆட்டம்

கடைசி நாள் ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 312 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஐந்தாம் நாளில் 85 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது. துவக்கத்திலேயே விக்கெட்கள் சரியத் துவங்கின.

வெ.இண்டீஸ் தடுமாற்றம்

வெ.இண்டீஸ் தடுமாற்றம்

37 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது வெஸ்ட் இண்டீஸ். அப்போது ஜோடி சேர்ந்த பிளாக்வுட், ப்ரூக்ஸ் ஜோடி தடுப்பாட்டம் ஆடாமல் அதிரடியாக ரன் குவித்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர். பிளாக்வுட் 55, ப்ரூக்ஸ் 62 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கைவிட்ட கேப்டன்

கைவிட்ட கேப்டன்

அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை தகர்ந்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் நிதான ஆட்டம் ஆடி டிராவை நோக்கி நகர்த்திச் செல்லாமல் அவரும் திடீரென அதிரடி ஆட்டம் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணி 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி இந்தப் போட்டியின் வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 1 என சமன் செய்துள்ளது.

Story first published: Monday, July 20, 2020, 23:02 [IST]
Other articles published on Jul 20, 2020
English summary
ENG vs WI : England vs West Indies second test match result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+