For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாஸ் ஜெயித்த உடன்.. தில்லாக முடிவு எடுத்த வெ.இண்டீஸ் கேப்டன்.. இங்கிலாந்து திணறல் துவக்கம்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.

Recommended Video

Eng vs WI 2nd Test Day 1 | Sibley and Stokes frustrate Windies

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பந்து வீசுவது கடினமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி துவக்க வீரரை விரைவில் இழந்து தடுமாறியது.

இரண்டாம் டெஸ்ட்

இரண்டாம் டெஸ்ட்

மான்செஸ்டர் நகரில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

மாறாத வெ.இண்டீஸ்

மாறாத வெ.இண்டீஸ்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் எந்த மாற்றமும் செய்யாமல் இரண்டாம் போட்டியில் களமிறங்கி உள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

இங்கிலாந்து அணி மாற்றம்

இங்கிலாந்து அணி மாற்றம்

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் மீண்டும் அணிக்கு திரும்பினார். மோசமாக ஆடி வந்த ஜோ டென்லி நீக்கப்பட்டார். பென் ஸ்டோக்ஸ் துணை கேப்டன் பொறுப்புக்கு திரும்பினார். பந்துவீச்சில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.

மூன்று பந்துவீச்சாளர்களும் மாற்றம்

மூன்று பந்துவீச்சாளர்களும் மாற்றம்

முதல் போட்டியில் ஆடிய ஜேம்ஸ் ஆண்டர்சர், மார்க் வுட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாம் டெஸ்டில் ஆட இருந்தார். ஆனால், அவர் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளை மீறியதால் அணியில் இருந்து கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டார்.

மழை

மழை

அவர்கள் மூவருக்கு பதில் ஸ்டூவர்ட் பிராடு, சாம் கர்ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இடம் பெற்றனர். இரண்டாவது போட்டி துவங்கும் முன் மழை பெய்தது. அதன் காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்தே டாஸ் போடப்பட்டது.

டாஸ்

டாஸ்

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை பெய்து இருந்ததால் துவக்கத்தில் எளிதாக விக்கெட் வீழ்த்தலாம் என்ற எண்ணத்தில் அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், இங்கிலாந்து மண்ணில் எதிரணிகள் முதலில் பந்துவீசி வெற்றி பெறுவது கடினம் என கூறப்படுகிறது.

வேகப் பந்துவீச்சு எடுபடவில்லை

வேகப் பந்துவீச்சு எடுபடவில்லை

ஜேசன் ஹோல்டர் எண்ணத்திற்கு மாறாக துவக்க ஓவர்களில் வேகப் பந்துவீச்சு எடுபடவில்லை. பந்து ஸ்விங் ஆனாலும் விக்கெட் கிடைக்கவில்லை. எனினும்ம் உணவு இடைவேளைக்கு முன் முதல் விக்கெட் விழுந்தது.

கை கொடுத்த சுழற் பந்துவீச்சு

கை கொடுத்த சுழற் பந்துவீச்சு

உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவர் என்பதால் சுழற் பந்துவீச்சாளரை பந்து வீசச் செய்தார் ஹோல்டர். ராஸ்டன் சேஸ் வீசிய சாதாரண பந்தில் பர்ன்ஸ் சிக்கி ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 13.2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 29 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Thursday, July 16, 2020, 21:52 [IST]
Other articles published on Jul 16, 2020
English summary
ENG vs WI : England vs West Indies second test score update. Jason Holder won the toss and chose to bowl.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+