Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட் வேட்டை நடத்திய சீனியர் ஜோடி.. தப்பான முடிவு எடுத்த வெ.இண்டீஸ் கேப்டன்!

மான்செஸ்டர் : மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழந்து 232 ரன்கள் பின்தங்கி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து மீண்டும் தவறு செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் மூத்த பந்துவீச்சு ஜோடி ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராடு மீண்டும் இணைந்து விக்கெட் வேட்டை நடத்தியது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் தொடரை வெல்லலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. இந்த நிலையில், போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது.

பந்துவீச்சு தேர்வு

பந்துவீச்சு தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார். இதே மான்செஸ்டர் மைதானத்தில் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. அதிலும் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ் 57, போப் 91, ஜோஸ் பட்லர் 67 ரன்கள் குவித்து இருந்தனர். பத்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஸ்டூவர்ட் பிராடு 45 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.

அதிர்ச்சி அளித்த பிராடு

அதிர்ச்சி அளித்த பிராடு

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் குவித்தது. 400 ரன்கள் எட்ட வேண்டும் என்ற இங்கிலாந்து அணியின் திட்டம் நிறைவேறவில்லை. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடியது. அந்த அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார் பிராடு.

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து பந்துவீச்சு

இரண்டாவது ஓவரில் ஸ்டூவர்ட் பிராடு பந்துவீச்சில் துவக்க வீரர் பிராத்வைட் 1 ரன்னில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது. ஆண்டர்சன் பந்துவீச்சிலும் விக்கெட்கள் வீழ்ந்தன.

வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர்

வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர்

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து இருந்தது வெஸ்ட் இண்டீஸ். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராடு தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை அச்சுறுத்தினர்.

ஒருவர் மட்டுமே

ஒருவர் மட்டுமே

முதல் இரண்டு போட்டிகளில் வயதை காரணம் காட்டி ஸ்டூவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரில் ஒருவர் மட்டுமே அணியில் இடம் பெற்றனர். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இங்கிலாந்து மூன்றாவது டெஸ்டில் அந்த வெற்றி ஜோடியை மீண்டும் களமிறக்கியது.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

தங்களின் முக்கியத்துவத்தை நிரூபிக்கும் வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராடு இருவரும் சிறப்பாக பந்துவீசினர். இருவரும் ஓவருக்கு 2 ரன்களுக்கும் குறைவாகவே ரன்கள் விட்டுக் கொடுத்தனர். ஆண்டர்சன் 11 ஓவர்களில் 4 மெய்டனும், ஸ்டூவர்ட் பிராடு 10 ஓவர்களில் 3 மெய்டனும் வீசி இருந்தனர்.

வெ.இண்டீஸ் நிலை

வெ.இண்டீஸ் நிலை

இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசி தோல்வி அடைந்து இருந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அதே முடிவை எடுத்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் 232 ரன்கள் பின்தங்கி உள்ளது அந்த அணி.

Story first published: Wednesday, July 29, 2020, 11:35 [IST]
Other articles published on Jul 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+