Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மணி நேரத்தில் ஹீரோவாக மாறிய ஆர்ச்சர்.. 2 விக்கெட், 1 அட்டாக்.. போராடும் வெ.இண்டீஸ்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றியை நோக்கி அடி எடுத்து வைக்கத் துவங்கி உள்ளது.

ஒரு மணி நேரத்தில் போட்டியை மாற்றி விட்டார் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர்.

ஜோப்ரா ஆர்ச்சர் முதல் இன்னிங்க்ஸ் முடிவு வரை வில்லனாக பார்க்கப்பட்டார். ஆனால், அவர் இரண்டாம் இன்னிங்க்ஸில் வீசிய 5 ஓவர்களில் அவர் ஹீரோவாக மாறினார்.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சௌதாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

114 ரன்கள் முன்னிலை

114 ரன்கள் முன்னிலை

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் குவித்தது. 114 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது அந்த அணி. இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 313 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 200 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆர்ச்சர்

ஆர்ச்சர்

அதுவரை போட்டி வெஸ்ட் இண்டீஸ் கைகளில் இருப்பதாகவே கருதப்பட்டது. இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி பந்து வீசத் துவங்கியது. ஆண்டர்சன் - ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீசத் துவங்கினர். 6வது ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார் ஆர்ச்சர்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

முதல் இன்னிங்க்ஸில் 65 ரன்கள் குவித்த பிராத்வைட், ஆர்ச்சர் பந்துவீச்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து பவுல்டு அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் கேம்பல் ஆர்ச்சர் வீசிய யார்க்கரில் காலில் காயம் அடைந்தார். தன் தாக்குதலால் அவரை ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் தற்காலிகமாக வெளியே அனுப்பி வைத்தார் ஆர்ச்சர்.

வெ.இண்டீஸ் தவிப்பு

வெ.இண்டீஸ் தவிப்பு

அடுத்து 8வது ஓவரில் ப்ரூக்ஸ் ஆர்ச்சர் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். மறுபுறம் மார்க் வுட் ஷாய் ஹோப் விக்கெட்டை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. ஆர்ச்சர் துவக்கத்தில் 5 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அனுபவ பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை அணியில் தேர்வு செய்யாமல் ஜோப்ரா ஆர்ச்சரை அணியில் தேர்வு செய்ததை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

திருப்பம்

திருப்பம்

அதற்கேற்ப, ஜோப்ரா ஆர்ச்சர் முதல் இன்னிங்க்ஸில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இந்த நிலையில், முக்கியமான இரண்டாம் இன்னிங்க்ஸில் துவக்கத்திலேயே இங்கிலாந்து அணிக்கு பெரிய திருப்பத்தை அளித்தார். இரண்டு விக்கெட் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை சிக்கலில் ஆழ்த்தினார்.

Recommended Video

Eng vs WI 1st test | Reasons for England loss
வெ.இண்டீஸ் போராட்டம்

வெ.இண்டீஸ் போராட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்களை இழந்த பின் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடியது. பிளாக்வுட், சேஸ் இருவரும் நிதானமாக ரன் சேர்த்து வந்தனர். 25 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்து இருந்தது.

Story first published: Sunday, July 12, 2020, 21:06 [IST]
Other articles published on Jul 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+