For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜோஸ் பட்லர் சரவெடி.. கோலி சாதனை காலி.. ரோகித் சாதனை சமன்.. இங்கிலாந்திடம் வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம் ஆடி 59 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்தார். இந்த ஆட்டத்தின் மூலம் அவர் விராட் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார். அதேபோல, ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாமின் சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பில் சால்ட் 20 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

ENG vs WI Jos Buttler Breaks Kohli s Record as England Defeats West Indies in First T20I

மூன்றாம் வரிசையில் இறங்கிய மூத்த வீரரான ஜோஸ் பட்லர் அதிரடியாக ரன் சேர்த்தார். அவர் 59 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்தார். ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்திருந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹாரி ப்ரூக் 6 ரன்களிலும், டாம் பென்டன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஜேக்கப் பெத்தேல் 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆமை வேகத்தில் ஆடி ஏமாற்றம் அளித்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் பிரண்டன் கிங் 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களை எடுத்தனர். நிதானமாகவும் ஆடினர். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் அரை சதம் அடித்த ஜோஸ் பட்லர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் உடன் பகிர்ந்து கொண்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 7 அரை சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி 6 அரை சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா, பாபர் அசாம் மற்றும் ஜோஸ் பட்லர் தலா 5 அரை சதங்களுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதேபோல, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார் ஜோஸ் பட்லர். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 693 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். டேவிட் வார்னர் 662 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஃபில் சால்ட் 640 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஜோஸ் பட்லர் 611 ரன்களுடன் நான்காவது இடத்திலும், விராட் கோலி 570 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Saturday, June 7, 2025, 10:23 [IST]
Other articles published on Jun 7, 2025
English summary
ENG vs WI: Jos Buttler Breaks Kohli's Record as England Defeats West Indies in First T20I
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+