Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கத்துக்குட்டி அயர்லாந்திடம் கவிழ்ந்து போன உலக சாம்பியன் இங்கிலாந்து..! 85 ரன்களுக்கு ஆல் அவுட்

Recommended Video

கத்துக்குட்டி அயர்லாந்திடம் கவிழ்ந்து போன உலக சாம்பியன் இங்கிலாந்து

லார்ட்ஸ்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்து உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த கொண்டாட்டங்கள் இன்னும் முற்று பெறாத நிலையில் அந்த அணி அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடியது.

England all out at 85 runs against Ireland in first test match

இந்த போட்டி உலக கோப்பை பைனல் நடைபெற்ற அதே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் களம் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு ஜோடியாக ஜேசன் ராயும், பர்னசும் வந்தனர். 5 ரன்கள் எடுத்த ஜேசன் ராய் முதலில் அவுட்டாகி, விக்கெட் சரிவை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மற்ற வீரர்களும் சீட்டுக்கட்டு போல சரிந்தனர். பெயர்ஸ்டோவ், மொயின் அலி,வோக்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 50 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. தொடர்ந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அயர்லாந்து அணியின் முர்டாக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். உலக கோப்பை தொடரின் நினைவு மறைவதற்குள், சாம்பியன் பட்டம் பெற்ற இங்கிலாந்து கத்துக்குட்டி அணி அயர்லாந்திடம் இந்த வேகத்தில் சுருண்டு இருப்பது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Wednesday, July 24, 2019, 18:06 [IST]
Other articles published on Jul 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+