For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம்.. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கருத்து.. ரோகித்துக்கு பாராட்டு!

அடிலெய்ட் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

வரும் வியாழக்கிழமை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் வலுவாக உள்ளது.

அதீத எதிர்பார்ப்பு

அதீத எதிர்பார்ப்பு

வேகப்பந்துவீச்சாளர்களும் அணியின் மானத்தை ஓரளவு காப்பாற்றி வருகின்றனர். எனினும் சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம். இந்திய அணியின் பலமாக சூரியகுமார் யாதவ் விளங்கி வருகிறார். இறுதிப் போட்டிக்கு முன்னேற போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

நெருக்கடியான ஆட்டம்

நெருக்கடியான ஆட்டம்

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அரையிறுதியில் எந்த அணியை சந்தித்தாலும் அது மிகவும் கடினமான போட்டியாக தான் இருக்கும். ஏனெனில் சூப்பர் 12 சுற்றில் பலமான அணிகளை வீழ்த்தி தான் அரை இறுதி சுற்றுக்கு இரண்டு அணிகளுமே வந்திருக்கும்.

வெற்றி பெறுவார்கள்

வெற்றி பெறுவார்கள்

இதனால் இது நெருக்கடியான போட்டியாக அமையும். வியாழக்கிழமை எந்த அணி சிறப்பாக விளையாடிகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று ஸ்டோக்ஸ் கூறினார். இதனை தொடர்ந்து சூரியகுமார் குறித்து பேசிய ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் சூரியகுமார் தனது பேட்டிங் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அவர் ஒரு சிறந்த வீரராக விளங்குகிறார்.

சூர்யகுமாரை அடக்குவோம்

சூர்யகுமாரை அடக்குவோம்

சூர்யகுமார் யாதவ் ஆடும் ஷாட்கள் எல்லாம் பிரமாதமாக உள்ளது. அவர் பேட்டிங் செய்யும்போது பந்து வீசும் அணி, அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தலையை சொரிய வேண்டியதுதான். சூரியகுமார் இப்போது நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் சூரிய குமாரை நாங்கள் அதிரடியாக ஆட விடமாட்டோம். அவரின் அதிரடியை அடக்குவோம் என்று பென்ஸ்டோக்ஸ் கூறினார்.

ரோகித்துக்கு பாராட்டு

ரோகித்துக்கு பாராட்டு

இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார். யுக்திகளை அவர் சிறப்பாக கையாளுகிறார். வீரர்களுக்கு அவர் முழு சுதந்திரத்தை அளிக்கிறார். அவர் அமைதியாக காய் நகர்த்தி வருகிறார். ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் கடந்த சில ஆட்டங்களில் ரன் அடிக்கவில்லை என்பதால் அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது. பெரிய ஆட்டத்தில் அவர் தன்னுடைய தாக்கத்தை வெளிப்படுத்துவார் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார் .

Story first published: Tuesday, November 8, 2022, 12:22 [IST]
Other articles published on Nov 8, 2022
English summary
England All rounder Ben stokes says they will restrict suryakumar in semi final சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம்.. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கருத்து.. ரோகித்துக்கு பாராட்டு!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+