For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீ என்னப்பா கூலிங் கிளாஸ் போட்டு பேட்டிங் ஆடுற.. சேட்டையை கொடுத்த சுட்டிக்குழந்தை சாம் கரண்!

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண் கூலிங் கிளாஸ் அணிந்து பேட்டிங் ஆடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் இங்கிலாந்து அணி தரப்பில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 325 ரன்களை விளாசியது.

England all rounder Sam Curran batting with sun glasses against West Indies and Scored 38 Runs at Antigua

அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 71 ரன்களும், ஜாக் கிராலே 48 ரன்களும், பில் சால்ட் 45 ரன்களும் சேர்த்தனர்.வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட், மோட்டி, ஒஷானே தாமஸ் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது.

சிறப்பாக ஆடிய கேப்டன் ஹோப் 83 பந்துகளில் 109 ரன்களும், அதனேஸ் 66 ரன்களும், ரொமாரியோ ஷெப்பர்ட் 28 பந்துகளில் 48 ரன்களும் சேர்த்தனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சாம் கரணின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் போது, வெயில் கண் கூசாமல் இருக்க சன் கிளாஸ் அணிவது வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் அது நாளடைவில் ஸ்டைலாக மாறியது. ஆனால் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் போது வீரர்களை சன் கிளாஸ் அணிய மாட்டார்கள். சில நேரங்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் சன் கிளாஸ் அணிவார்கள். ஆனால் பேட்டிங்கில் எந்த வீரரும் அணிந்ததில்லை. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சாம் கரண் சன் கிளாஸ் அணிந்து பேட்டிங் செய்தார்.

அதிரடியாக ஆடிய சாம் கரண் 26 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 38 ரன்களை விளாசினார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக கிரிக்கெட் களத்தில் சேட்டைகளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள சாம் கரண், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது வித்தியாசமான சன் கிளாஸ் அணிவது ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 4, 2023, 14:35 [IST]
Other articles published on Dec 4, 2023
English summary
England all rounder Sam Curran batting with sun glasses against West Indies and Scored 38 Runs at Antigua
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+