Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் தொடர் : பிளாக் லைவ்ஸ் மேட்டருக்காக ஒருங்கிணைந்த அணிகள்

சௌதாம்ப்டன் : 3 மாதங்களுக்கு மேல் கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் மீண்டும் துவங்கியுள்ளன.

Recommended Video

England and West Indies players kneel to support Black Lives Matter

இதில் பிளாக் லைவ்ஸ் மேட்டருக்காக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் வீரர்கள் மண்டியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

117 நாட்களுக்கு பிறகு துவங்கிய இந்த போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் மழை மற்றும் மோசமான லைட்டிங் காரணமாக 17.4 ஓவர்களே போடப்பட்டன.

117 நாட்களுக்கு பிறகு போட்டி

117 நாட்களுக்கு பிறகு போட்டி

இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மீண்டும் துவங்கியுள்ளது. இந்த போட்டி மழை மற்றும் மோசமான லைட்டிங் காரணமாக 17.4 ஓவர்களுக்குள் முடிக்கப்பட்டது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இயக்கத்திற்கு ஆதரவு

இயக்கத்திற்கு ஆதரவு

அமெரிக்காவில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தையடுத்து பல்வேறு நாடுகளில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் வலுப் பெற்றுள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில், லோகோக்களை தங்களது டி-சர்ட்டுகளில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அணிந்திருந்தனர்.

மண்டியிட்டு ஆதரவு

மண்டியிட்டு ஆதரவு

மேலும் போட்டி துவங்குவதற்கு முன்னதாக மண்டியிட்டு தங்களது ஆதரவை பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு தெரிவித்தனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த, முன்னாள் மேற்கிந்திய ஜாம்பவான் மறைவிற்கும் போட்டியின் துவக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக 3 மணிநேரங்கள் தாமதமாக துவங்கியது.

வானிலை ஆய்வாளர்கள் அறிவிப்பு

வானிலை ஆய்வாளர்கள் அறிவிப்பு

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 20 ரன்களும் ஜோ டென்லே 14 ரன்களும் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது நாளான இன்றும் அவர்களது பார்ட்னர்ஷிப் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் மழை பொழியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, July 9, 2020, 10:07 [IST]
Other articles published on Jul 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+