Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் அணிகளிலேயே ரொம்பப் "பெருசு" யார் தெரியுமா? #india500

சென்னை: இந்திய அணிக்கு முன்பாகவே 500 போட்டிகளைக் கண்ட அணிகளாக இங்கிலாந்து, ஆஸ்ரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.

இந்த மூன்று அணிகளிலும் ரொம்ப பெருசு இங்கிலாந்துதான். அது ஆயிரம் போட்டிகளுக்குப் பக்கத்தில் போய் விட்டது. இதுவரை இங்கிலாந்து 976 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இதுவரை 791 போட்டிகளில் ஆடியுள்ளது. அதிக அளவில் டெஸ்ட் ஆடியுள்ள 2வது பெரிய அணி ஆஸ்திரேலியாதான். இந்த வரிசையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு 3வது இடம். அது இதுவரை 517 போட்டிகளை முடித்துள்ளது.

சூப்பர் சீனியர் இங்கிலாந்து

சூப்பர் சீனியர் இங்கிலாந்து

இங்கிலாந்து அணிதான் இருப்பதிலேயே சூப்பர் சீனியர். 976 போட்டிகளை முடித்துள்ள இங்கிலாந்து அதில் 350 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 284 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 342 போட்டிகளை டிரா செய்துள்ளது.

வெற்றி ஜாஸ்தி ஆஸ்திரேலியாவுக்கு

வெற்றி ஜாஸ்தி ஆஸ்திரேலியாவுக்கு

ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி விகிதம் ஜாஸ்தியாகும். அதாவது இந்தி அணி 791 போட்டிகளில் ஆடி 372 போட்டிகளை வென்றுள்ளது. 211 போட்டிகளை இழந்துள்ளது. 206 போட்டிகளை டிரா செய்துள்ள ஆஸ்திரேலியா 2 போட்டிகளை டை செய்துள்ளது.

3வது இடம் வெஸ்ட் இண்டீஸுக்கு

3வது இடம் வெஸ்ட் இண்டீஸுக்கு

இந்த வரிசையில் 3வது இடத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளது. இந்த அணி 517 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளது. அதில் வெற்றி 164 மட்டுமே. தோல்வி எண்ணிக்கை 179 ஆகும். டிரா 173, டை 1.

நான்காவது இடத்தில் இந்தியா

நான்காவது இடத்தில் இந்தியா

500வது போட்டியை நாளை சந்திக்கவுள்ள இந்தியா இந்த வரிசையில் 4வது இடத்தில் வருகிறது. 129 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள இந்தியா, 157 தோல்விகளைச் சந்தித்துள்ளது. 212 டிரா மற்றும் ஒரு டை ஆன போட்டியும் இதில் உண்டு.

5வது இடத்தில் நியூசிலாந்து

5வது இடத்தில் நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 5வது வரிசையில் உள்ளது. இந்த அணி இதுவரை 412 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் வெற்றி 85. தோல்வி 166, டிரா 161 ஆகும்.

Story first published: Wednesday, September 21, 2016, 15:51 [IST]
Other articles published on Sep 21, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+