
அதிரடி பவுலிங்
வெற்றிக் கனவுகளோடு பேட் செய்ய வந்த அயர்லாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை பிரித்து மேய்ந்தனர் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர். வோக்ஸ் வீசிய 4வது ஓவரில் போர்ட்டர்பீல்டு 2 ரன்களில் ஆட்டமிழந்தார். முக்கிய பேட்ஸ்மேன்கள் ஓரிலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

38 ரன்களுக்கு ஆல் அவுட்
அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த அயர்லாந்து, 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்தது அயர்லாந்து. வோக்ஸ் 6 விக்கெட்களும், பிராடு 4 விக்கெட்களும் எடுத்து அசத்தினர்.

4 பேர் டக் அவுட்
அயர்லாந்தில் அதிக பட்சமாக மெக்கோலம் மட்டுமே இரட்டை இலக்கமாக 11 ரன்கள் எடுத்தார். சிலர் ஓரிலக்கத்திலும், 4 பேர் டக் அவுட்டும் ஆனார்கள். வெறும் 182 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி பயணித்த அயர்லாந்து 38 ரன்களில் வீழ்ந்தது.

இங்கிலாந்து சாதனை
இந்த போட்டியில் வென்றதன் மூலம் 112 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை ஒன்றை படைத்தது இங்கிலாந்து. முதல் இன்னிங்சில் குறைந்த ஸ்கோர் அடித்தும் அந்த போட்டியை வென்றதில் முதலிடத்தில் இங்கிலாந்து உள்ளது.

1907ம் ஆண்டு
1886 - 87ம் ஆண்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ரன்கள் அடித்தும் அந்த போட்டியில் வென்றது. அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி. 1907ம் ஆண்டில் முதல் இன்னிங்சில் 76 ரன்கள் அடித்த இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அந்த போட்டியை வென்றது.

குறைந்தபட்ச ஸ்கோர்
அதன்பிறகு 112 ஆண்டுகள் கழித்து, முதல் இன்னிங்சில் குறைந்த ஸ்கோர் அடித்தும் அந்த போட்டியில் ஒரு அணி வென்றது இந்த போட்டியில் தான். முதல் இன்னிங்சில் 85 ரன்கள் அடித்த இங்கிலாந்து, அயர்லாந்தை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த 112 ஆண்டுகளில், முதல் இன்னிங்சில் குறைந்த ஸ்கோர் எடுத்த எந்த அணியும் வென்றதில்லை.


Click it and Unblock the Notifications











