Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து 400 ரன்கள் அடிக்கும் என ஆருடம்.. முதல் போட்டிக்கு பிறகு வாஹனை சுற்றிவளைத்த ரசிகர்கள்

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு மேல் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் ஆருடம் கூறினார்.

ஆனால் நடந்தோ இந்தியாவுக்கு எதிராக மிக குறைந்த ரன்களை இங்கிலாந்து அணி அடித்து சோக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

400 ரன்களுக்கு மேல் 6 முறை அடித்த அணி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச டாப் 3 ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது.

பலமான அணி

பலமான அணி

மேலும் கடந்த மாதம் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 498 ரன்களை இங்கிலாந்து அணி விளாசியது. நடந்து முடிந்த 5வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்சில் 378 ரன்கள் என்ற இலக்கை கூட எளிதில் எட்டி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் டெஸ்ட் போட்டியிலேயே இந்த கதி என்றால் ஒருநாள் போட்டியில் என்ன ஆகுமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

தலைக்கீழ் மாற்றம்

தலைக்கீழ் மாற்றம்

அதற்கு ஏற்றார் போல் ஜேசன் ராய், பாரிஸ்டோ, ஜோ ரூட், பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன், மொயின் அலி என மிரட்டலான பேட்டிங் வரிசை இருந்தது. ஆனால் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 110 ரன்கள் மட்டுமே அடிக்க, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி 50 ஓவர்கள் வரை நீடித்து இருந்தால் போட்டி முடிய நள்ளிரவு 1.30 ஆகி இருக்கும். ஆனால் போட்டியோ 9 மணிக்குள் முடிந்துவிட்டது. இதனையடுத்து, மைக்கேல் வாஹன் சொன்ன ஆருடம் தவறாக போய்விட்டதாக ரசிகர்கள் அவருக்கு எதிராக மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்து கேலி செய்தனர்.

Recommended Video

Rohit Sharma குறித்து ஏன் வாய் திறக்க மாட்றீங்க? -Gavaskar கேள்வி *Cricket
சரணடைந்த வாஹன்

சரணடைந்த வாஹன்

தாம் தவறு செயதுவிட்டோம் என்பதை உணர்ந்த வாஹன் ரசிகர்களை கூல் செய்யும் விதமாக, தனது டிவிட்டர் தோஸ்தான வாசிம் ஜாபரை டேக் செய்து, மாலை நேரம் போட்டி நீடிக்கும் என நினைத்தேன். ஆனால் போட்டி விரைவில் முடிந்துவிட்டதால், டீ குடிக்க நிறைய நேரம் இருக்கு. வாருங்க ஜாபர் ஒன்றாக சேர்ந்து அருந்துவோம் என்ற பொருள் படும் படி டிவிட் போட்டார். அதற்கு ஜாபர் என்னுடைய வாத்துகளை முதல் வரிசையில் அமர வைத்துவிடுங்கள் என்று கிண்டல் அடித்தார்.

Story first published: Wednesday, July 13, 2022, 7:45 [IST]
Other articles published on Jul 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+