For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீசில் அதிரடி காட்டிய கீமர் ரோச்.. டெஸ்ட் போட்டியில் 77 ரன்களில் இங்கிலாந்து சுருண்டது

பார்படாஸ்:வெஸ்ட் இண்டீசுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 77 ரன்களுக்குள் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் 11 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து கீமர் ரோச் அசத்தினார்.

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

England out for 77 in embarrassing west indies collapse, in barbados test match

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 101.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கே தொடக்கம் முதேலே அதிர்ச்சிதான்.

வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 30.2 ஓவர்களில் 77 ரன்களுக்குள் சுருண்டது. இங்கிலாந்து அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை.

அதிக பட்சமாக ஜென்னிங்ஸ் மட்டும் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது.

பிரெத்வொய்ட் 24 ரன்களிலும், கேம்ப்பெல் 33 ரன்களிலும் வெளியேறினர். ஹோப்பும் 3 ரன்களில் நடையை கட்டினார். பிராவோ ஒரு ரன்னில் திருப்தியாக வெளியேற.. சேஸ் டக்அவுட்டானார்.

ஹெய்ட்மெர் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்தை விட 339 ரன்கள் முன்னிலையில் வெஸ்ட்இண்டீஸ் உள்ளது. இதன் மூலம் வெஸ்ட்இணடீஸ் வலுவான நிலையில் உள்ளது.

Story first published: Friday, January 25, 2019, 14:20 [IST]
Other articles published on Jan 25, 2019
English summary
West Indies bowled out England for just 77 runs in a remarkable second day of the first Test in Barbados. Fast bowler Kemar Roach ripped through the England line-up, taking 5-17 off 11 fiery overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X