Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயம் ரொம்ப அதிகமாகுமாம்.. அவதிப்படும் பெஸ்ட் பவுலர்... ஒரு நாள் தொடரில் இல்லை...ஐபிஎல்-ம் சந்தேகம்

அகமதாபாத்: இங்கிலாந்து அணியின் முன்னணி வீரருக்கு ஏற்பட்டுள்ள காயம், அந்த அணியை விடவும் ஐபிஎல்-ன் ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 3 -2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து ஒருநாள் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக முக்கிய வீரர் விலக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் ஐபிஎல்-லிலும் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தீவிர காயம்

தீவிர காயம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இங்கிலாந்து அணி இழந்துள்ளது. இதனால் ஒரு நாள் தொடரில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகாக இங்கிலாந்துக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளார்.

எப்படி காயம்

எப்படி காயம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பங்கேற்ற ஆர்ச்சருக்கு முழங்கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால், 2-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் விளையாடினார். ஆனால், ஆர்ச்சரின் முழங்கையில் ஏற்பட்ட காயம் தீவிரமடைவதால் அவரை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு அடுத்து சில நாட்களில் அணி நிர்வாகம் அனுப்பிவைக்க உள்ளது. இதனை அந்த அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்தார். இதனால் அந்த அவர் ஒரு நாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் காயம் தீவிரமாவதால் அவர் ஐபிஎல்-ம் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த 2018-ம் ஆண்டு ஐபிஎல்-ன் போது ஆர்ச்சரை ரூ.7.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஏலம் எடுத்தது. அவரின் ஏலத் தொகைக்கு ஏற்ப ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இங்கிலாந்து அணி அவரை தக்கவைத்துள்ளது. எனினும் அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ள்தால் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

மற்ற பவுலர்கள்

மற்ற பவுலர்கள்

ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் ராஜஸ்தான் அணியில் கிறிஸ் மோரிஸ், பென் ஸ்டோக்ஸ், முஸ்திவிசூர் ரஹ்மான், ஆன்ட்ரோ டை ஆகியோர் வேகப்பந்துவீச்சுக்கு இருக்கின்றனர். இதில் கிறிஸ் மோரிஸ் இந்தாண்டுக்கான ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு எவ்வளவு பெரிய தாகக்த்தை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, March 21, 2021, 22:33 [IST]
Other articles published on Mar 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+