
ஆடுகளம்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி ரன் குவிப்புக்கு சாதகமாக செயல்படும். முதல் சில ஓவர்கள் பந்த ஸ்விங் ஆனாலும், அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் கையே ஓங்கி இருக்கும். மைதானம் மிகப் பெரியது என்பதால் சுழற்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆடுகளம் போட்டி முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

டாப் 3 வீரர்கள்
இந்திய அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர் ஷிகர் தவான் தொடக்க வீரராக அணிக்கு திரும்பியுள்ளார். மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்கவார்.விராட் கோலி கடந்த சில போட்டிகளால் ரன் அடிக்கவில்லை, ஆனால் அவர் பெரிய ஸ்கோர் அடிக்க ஒருநாள் போட்டி நல்ல வாய்ப்பாக அமையும். கோலி கடைசியாக விளையாடிய 11 ஒருநாள் போட்டியில் 6 முறை அரைசதம் அடித்து இருக்கிறார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு
நடுவரிசையில், கடந்த போட்டியில் சதம் விளாசிய சூர்யகுமார் நம்பர் 4வது வீரராக விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக நடுவரிசையில் விளையாட உள்ளார். நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

பந்துவீச்சாளர்கள்
இதே போன்று ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், சாஹலும் சுழற்பந்தவீச்சு பிரிவை பார்த்து கொள்வார்கள். வேகப்பந்துவிச்சாளர் பொறுத்த வரையில் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் அவர்களது இடத்தை பிடித்து கொள்வார்கள். 3வது வேகப்பந்துவீச்சாளர் இடத்துக்கு சிராஜ், சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்படும். ஆனால் 7 ஒருநாள் போட்டியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணாவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும்.

பிளேயிங் லெவன்
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜேசன் ராய், பட்லர், ஸ்டோக்ஸ், பாரிஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி ஆகியோர் விளையாடுவதால் பேட்டிங் கடும் பலமாக இருக்கும். எனினும் பந்துவீச்சில் போதிய அனுபவம் இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. இந்திய உத்தேச அணி. 1. ரோகித் சர்மா, 2, ஷிகர் தவான், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6, ஹர்திக் பாண்டியா, 7. ஜடேஜா. 8, முகமது ஷமி, 9, பும்ரா 10, பிரசித் கிருஷ்ணா. 11. சாஹல்


Click it and Unblock the Notifications











