Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி விளையாடுவாரா ?மாட்டாரா ? வெளியான அப்டேட்

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு தொடங்குகிறது.

Recommended Video

IND vs ENG 1st ODI: India முறியடித்த Records | Aanee's Appeal

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வாழ்வா ?சாவா? என்ற கட்டத்தில் இங்கிலாந்து அணி நாளைய ஆட்டத்தில் களமிறங்குகிறது. ஆனால் தற்போது அனைவரின் கண்களும் விராட் கோலி மீது தான் உள்ளது.

கோலி உடல்தகுதி

கோலி உடல்தகுதி

முதல் போட்டியின் போது இந்திய அணியுடன் மைதானத்திற்கு விராட் கோலி வந்தார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறி அணியில் வாய்ப்பு தரவில்லை. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா? மாட்டாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காயம் தீவிரமாக இருந்திருந்தால் விராட் கோலி இந்திய அணியை விட்டு விலகி தாயகம் திரும்பி இருப்பார். பிசிசிஐயும் அவரது உடல் தகுதி குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கும் .

பிசிசிஐ அனுமதி

பிசிசிஐ அனுமதி

ஆனால் இது லேசான காயம் என்பதால் விராட் கோலி அணியுடன் தொடர அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இரண்டாவது போட்டியில் விராட் கோலி கண்டிப்பாக விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . லாட்ஸ் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும். பந்தின் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும்.இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்க கொஞ்சம் சிரமம் இருக்கலாம்.

சவால் காத்திருப்பு

சவால் காத்திருப்பு

முதல் போட்டியை போல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் டாஸ் ஆட்டத்தின் முடிவையே தீர்மானிக்கும். இதன் நாளைய போட்டியில் விராட் கோலி இடம் பெற்றால் , அது அவருக்கு நிச்சயம் பெரும் சவாலாக இருக்கும் . விராட் கோலி கடைசியாக விளையாடிய 11 ஒரு நாள் போட்டிகளில் ஆறு முறை அரை சதம் அடித்துள்ளார் .மேலும் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார் .

வாய்ப்பு ஏன்?

வாய்ப்பு ஏன்?

இதனால் விராட் கோலியை அணியை விட்டு நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. விராட் கோலி ஃபார்ம் திரும்பும் வரை அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கும். எனினும் டி20 போட்டிகளில் விராட் கோலி அதிரடியாக ஆடி தான் ஆட்டம் இழந்தாரே தவிர, அடிக்க முடியாமல் திணறி ஆட்டம் இழக்கவில்லை . தற்போது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற ரிஸ்க் அவ்வளவு ஆக இருக்காது .

லார்ட்ஸ்சில் கிங்

லார்ட்ஸ்சில் கிங்

இதனால் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வர நல்ல வாய்ப்பாக அமையும்.கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி தனது விசேஷ சதத்தை அடித்தால் அதைவிட சிறப்பான விஷயம் வேறு ஏதும் இருக்காது.

Story first published: Wednesday, July 13, 2022, 20:42 [IST]
Other articles published on Jul 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+