Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்புங்க, கோலி மீது திடீரென பாயும் முன்னாள் வீரர்.அப்படி என்ன ஆனது?

புனே: விராட் கோலிக்கு நடுவர்கள் ரெட் அட்டை அல்லது மஞ்சள் அட்டை கொடுத்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒரு நாள் தொடரிலும் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் விராட் கோலி நடுவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டி20 தொடர்

டி20 தொடர்

4வது டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவின் விக்கெட் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அடித்த பந்தை டேவிட் மலான் தரையோடு ஒட்டி பிடித்தார். இதனை ரிவ்வியூவ் செய்த 3வது நடுவர் களநடுவரின் சாஃப்ட் சிக்னல் படி செல்லுமாறு கூறியதால் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இது குறித்து பேசியிருந்த விராட் கோலி, இங்கிலாந்து வீரர்கள் நடுவரை சாஃப்ட் சிக்னல் அவுட் தருமாறு வலியுறுத்தியதாக கோலி குற்றம் சாட்டினார்.

லாய்ட்

லாய்ட்

கோலியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய டேவிட் லாய்ட், 4வது டி20ல் நடுவர் நிதின் மேனனுக்கு இங்கிலாந்து அழுத்தம் கொடுத்ததா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஒன்றை உறுதியாகக் கூற முடியும், தொடர் முழுதும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தார், தொந்தரவு செய்து நெருக்கடி அளித்தார் என்பது உண்மை என குற்றம்சாட்டியுள்ளார்.

பிரச்னை

பிரச்னை

அதே போல் அவுட் ஆகிச் செல்லும் எதிரணி வீரர்கள் மீது கோலி அநாகரீகமாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார், அவர்களிடம் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி பல்பிடுங்கப்பட்ட பாம்பு போன்று ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்க்கின்றது. இது போன்று நடந்து கொள்ளும் கேப்டன்களை வெளியே அனுப்ப மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை காண்பிக்கும் அதிகாரம் நடுவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 அம்பயர்ஸ் கால் சர்ச்சை

அம்பயர்ஸ் கால் சர்ச்சை

ஒரு நாள் போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பாக, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அம்பயர்ஸ் கால் என்பதை அகற்ற வேண்டும் என்றும் பந்து ஸ்டம்பை லேசாகத் தாக்குவதாக இருந்தாலும் அவுட் தர வேண்டும் என்றும் கோலி தெரிவித்தார். இதுகுறித்து பேசிய லாய்ட், கோலிக்கு ஒன்றும் தெரியவில்லை, இப்படிச் செய்தால் என்ன ஆகும், பைல்களை தூக்குவது போல் போகும் பந்துகள் எல்லாம் அவுட் என்றால் உலகில் எல்லா டெஸ்ட் போட்டிகளும் 2 நாட்களில் முடிந்து விடும். ஒருநாள் போட்டிகள் அரைநாளில் முடிந்து விடும் என தெரிவித்தார்.

Story first published: Wednesday, March 24, 2021, 18:54 [IST]
Other articles published on Mar 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+