Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னோட கேப்டன்ஷிப்ல இதுதான் சிறப்பான போட்டி... ஜேசன் ஹோல்டர் மகிழ்ச்சி

சௌதாம்டன் : 4 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் கடந்த 8ம் தேதி இங்கிலாந்தின் சௌதாம்டனில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்கியது.

இந்த தொடரில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி கொண்டுள்ளது.

இந்நிலையில் 4வது நாளில் தன்னுடைய அணி மேற்கொண்ட குழு முயற்சியால்தான் இது சாத்தியமானது என்று மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் வெற்றி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 117 நாட்களாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் இடையில் இங்கிலாந்தின் சௌதாம்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

கடந்த 8ம் தேதி துவங்கிய இந்த போட்டியின் முதல் நாளில் மழை மற்றும் மோசமான லைட்டிங் காரணமாக தடைபட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் தற்போது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் 3க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை மேற்கிந்திய தீவுகள் அணி முந்தியுள்ளது.

வீரர்களின் கூட்டு முயற்சி

வீரர்களின் கூட்டு முயற்சி

இதனிடையே இந்த போட்டியின் வெற்றி தங்களது அணிக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாக மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். வெற்றிக்கு 4வது நாளில் தங்களது அணி வீரர்கள் குறிப்பாக பௌலர்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியும் பீல்டர்கள் ஓய்வில்லாமல் மேற்கொண்ட பீல்டிங்கும் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த முயற்சி

மிகச்சிறந்த முயற்சி

தன்னுடைய கேப்டன்ஷிப்பின்கீழ் தன்னுடைய அணி மேற்கொண்ட மிகச்சிறந்த முயற்சி இது என்றும் அவர் கூறியுள்ளார். 4வது நாளில் வெறும் 30 ரன்களுக்கு இங்கிலாந்தின் 5 விக்கெட்டுகளை மேற்கிந்திய தீவுகளின் பௌலர்கள் வீழ்த்தினர். 13 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் பெற்ற வெற்றி இது. இந்த வெற்றியை முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹோல்டர் துவக்கி வைத்தார்.

Story first published: Monday, July 13, 2020, 17:53 [IST]
Other articles published on Jul 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+