வரலாறு காத்திருக்கும்... 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வெல்வோம்... ஜேசன் ஹோல்டர் சூளுரை
ஓல்ட் ட்ரபோர்ட் : கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் துவங்கியுள்ளது.
Recommended Video
1988ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி கொண்ட நிலையில், இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் இந்த தொடரை வெற்றி கொள்வோம் என்றும் அதற்காக வரலாறு காத்திருக்கும் என்றும் மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் மே.இ. தீவுகள் வெற்றி
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இங்கிலாந்தின் சௌதாம்டனில் கடந்த 8ம் தேதி துவங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச அளவில் முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகள் 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த போட்டி மூலம் துவங்கியுள்ளது.

7 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர்
மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், இந்த முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை பெற்றுள்ளார். மேலும் மேற்கிந்திய தீவுகளின் மற்ற வீரர்களும் அவருக்கு கைகொடுத்த நிலையில், இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 1988ல் தொரை கைப்பற்றியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த தொடரை வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

தொடரை கைபற்றுவதே இலக்கு
இந்நிலையில், ஐசிசி தரவரிசையில் டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர் பிரிவில் முதலிடத்தில் உள்ள ஜேசன் ஹோல்டர், இந்த டெஸ்ட் புதிர் போட்டியில் ஒரு கட்டத்தை வென்றது போன்றது என்று தெரிவித்துள்ளார். 32 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றுவதே தங்களுடைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

வென்றால் தொடர் வெற்றி
இந்த தொடரில் முதல் போட்டியை வென்றுள்ள மேற்கிந்திய தீவகள் அணி, இன்று துவங்கியுள்ள இரண்டாவது போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றிவிடும். மேலும் கடந்த 25 ஆண்டுகளாக தங்களுடைய நாட்டைவிட்டு வெளியில் ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் தவிர்த்து முன்னணி அணிகளுடன் வெற்றி பெறவில்லை என்ற குறை, இன்று துவங்கும் இந்த போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு நிவர்த்தி ஆகும்.


Click it and Unblock the Notifications