Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் ஓகே.. அதுமட்டும் வேண்டாம்.. சென்னை உட்பட 3 நகரங்களில் கிரிக்கெட் தொடர்.இங்கிலாந்து கண்டிஷன்

டெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் வரும் பிப்ரவரி மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ள நிலையில் பிசிசிஐ அமைப்பிற்கு இங்கிலாந்து முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் இந்தியா இங்கிலாந்து இடையே கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் என்ற மிக நீண்ட தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது.

இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது.

டெஸ்ட்

டெஸ்ட்

3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் டி 20 தொடர் முழுக்க மார்ச் 12 முதல் 20ம் தேதி வரை அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

போட்டி

போட்டி

அதன்பின் புனேவில் 3 ஒருநாள் போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில், இந்த கிரிக்கெட் தொடர் முழுக்க குஜராத், தமிழகத்தில் சென்னை மற்றும் புனே ஆகிய மைதானங்களில் மட்டுமே நடக்கிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மக்கள்

மக்கள்

மக்கள் கூட்டத்தோடு இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த கிரிக்கெட் தொடரில் மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்க கூடாது என்று இங்கிலாந்து அணி கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா காலத்தில் பெரிய பெரிய மைதானங்களில் போட்டி நடக்கிறது. இதில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பாதுகாப்பு கருதி ரசிகர்களை அனுமதிக்க கூடாது. பந்துகள் ரசிகர்களிடம் செல்லும். இது வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும். அதனால் இந்த தொடரை ரசிகர்கள் இன்றி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதை இந்திய அணி நிர்வாகம் ஏற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வருகிறது.

Story first published: Wednesday, December 30, 2020, 14:31 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+