Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

27 பந்தில் 33 சிக்ஸ் அடிக்க முடியுமா.. பாகிஸ்தான் கனவை கலைத்த பட்லர்.. டாஸிலேயே பங்காளிக்கு தோல்வி!

கொல்கத்தா: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்துள்ளது.

கொல்கத்தா மைதானத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதோடு, முதல் பேட்டிங் செய்யவில்லை என்றாலே அரையிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலை இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

England won the toss and chose to Bat first against Pakistan in icc 50 over World Cup

இதனால் பாகிஸ்தான் அணியே நினைத்தாலும் வெற்றிபெற முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை இங்கிலாந்து அணி 50 ரன்கள் சேர்த்தால், அதனை பாகிஸ்தான் அணி 2 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை இங்கிலாந்து அணி 100 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தால், பாகிஸ்தான் அணி 2.5 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும்.

ஒருவேளை இங்கிலாந்து அணி 200 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தால், பாகிஸ்தான் அணி 4.3 ஓவர்களிலும், இங்கிலாந்து 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால், பாகிஸ்தான் அணி 6.1 ஓவர்களிலும் சேஸ் செய்ய வேண்டும். இதனால் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதாகவே பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பட்லர் பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளமாக உள்ளது. கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்குகிறோம். தொடர் தோல்வியை முடிவுக்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. இன்றைய ஆட்டம் டேவிட் வில்லிக்கு உணர்வுப்பூர்வமான நாளாகும். இங்கிலாந்து அணிக்காக சிறந்த கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறார் என்று கூறினார்.

இதன்பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் செய்ய விரும்பினோம். ஆனால் டாஸ் எங்களின் கைகளில் இல்லை. எங்களின் சிறந்த பவுலர்களை கொண்டு இங்கிலாந்து அணியை விரைந்து வீழ்த்த முயற்சிப்போம். இன்றைய ஆட்டத்தில் ஹசன் அலிக்கு பதிலாக ஷதாப் கான் களமிறங்குகிறார். ஃபகர் ஜமான் பேட்டிங்கை எதிர்பார்த்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 11, 2023, 14:17 [IST]
Other articles published on Nov 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+