Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச போட்டியை விட ஐபிஎல் பெருசா?...குழப்பத்தில் ஸ்டார் ப்ளேயர்ஸ்.. இங்கிலாந்து அணிக்கு சிக்கல்..

சென்னை: ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான வீரர்களின் ஏலம் நாளை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் வரவிருக்கும் ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து அணி வீரர்களுக்கும் அந்த அணிக்கும் சர்வதேச போட்டியில் வெல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தப்பட்டது. இதனால் இந்த முறை இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல்-க்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடர் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெறுகிறது. அணிகளும் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் தொடரில் அதிகளவில் இந்திய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் வெளிநாட்டு வீரர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக அவர்கள் ஆட்டத்தின் கீ மேக்கர்களாகவும், அணியின் கேப்டன்களாகவும் விளங்கி வருகின்றனர்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் அதிகளவில் பங்குபெறுகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் தொடங்குகிறது. எனவே இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-ல் பங்குபெற்றால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 நியூசிலாந்துக்கு சிக்கல்

நியூசிலாந்துக்கு சிக்கல்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், பேர்ஸ்டோ, மொயின் அலி, மார்க் வுட் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

ஐபிஎல் கவுன்சில் வேண்டுகோள்

ஐபிஎல் கவுன்சில் வேண்டுகோள்

ஐபிஎல்-ல் ப்ளே ஆஃப் சுற்று வரும் போதுதான் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடங்குகிறது, எனவே ப்ளே ஆஃப் சுற்றுகளில் அணியில் சேர்க்கப்படாத இங்கிலாந்து வீரர்களை நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கு விடுவிக்குமாறு 8 அணிகளுக்கும் ஐபிஎல் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Story first published: Thursday, February 18, 2021, 8:37 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+