Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க வேண்டும்.. 2 தமிழக வீரர்களுக்காக குரல் தந்த இங்கிலாந்து கேப்டன்.. நேற்று நடந்த தரமான சம்பவம்

கொல்கத்தா: கொல்கத்தா அணியில் இருக்கும் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை நீக்க கூடாது என்று இயான் மோர்கன் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

2021 ஐபிஎல் தொடருக்காக அணிகள் தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ளது.

இந்த ஏலம் மிகவும் சிறிய அளவில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நேற்று அணியில் இருந்து விடுவித்தது.

கொல்கத்தா

கொல்கத்தா

இந்த நிலையில் கொல்கத்தா அணியில் இருக்கும் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை நீக்க கூடாது என்று இயான் மோர்கன் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.ஒரு சில வீரர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். டாம் பான்டன், கிறிஸ் கிரீன், நிகில் நாயக், சித்தார்த் எம், சித்தேஷ் லாட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

கொல்கத்தா அணியில் 11 இந்திய வீரர்கள் 7 வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், நிதிஷ் ராணா, சுப்மான் கில், ரிங்கு சிங் , ராகுல் திரிபாதி , கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லோகி பெர்குசன், பாட் கும்மின்ஸ் , பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியார்ஆகியோர் அணியில் தொடர்வார்கள்.

இடம்பெறுவார்கள்

இடம்பெறுவார்கள்

கொல்கத்தா அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்படுவார் என்று நிறைய பேர் கூறிய நிலையில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட வாய்ப்பே இல்லை என்று கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அதேபோல் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வருண் சக்ரவர்த்தியையும் கொல்கத்தா அணி தக்க வைத்துள்ளது .

முக்கியம்

முக்கியம்

இவர்கள் இருவரும் முக்கியமான வீரர்கள், இவர்களை ரிலீஸ் செய்ய கூடாது என்று இயான் மோர்கன் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் பேசி இருக்கிறார். இதன் காரணமாகவே தற்போது கொல்கத்தா அணியில் இவர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் - இயான் மோர்கன் இடையிலான நட்பு எப்போதும் போல தொடர்கிறது என்றும் கூறுகிறார்க்ள.

Story first published: Thursday, January 21, 2021, 19:03 [IST]
Other articles published on Jan 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+