Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"41 வயது.. ஓய்வுபெற்று 2 வருஷமாச்சு" ஆனாலும் ஃபிட்னெஸ் குறையவில்லை.. தோனியை வியக்கும் ரசிகர்கள்!

ராஞ்சி: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், நட்சத்திர வீரர் தோனி உடல் தகுதியுடன் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

சென்னை மண்ணில் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற பின்னர் கிரிக்கெட்டுக்கு முழுவதும் முழுக்கு போட தோனி திட்டமிட்டு வருகிறார். இதனால் 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரே, தோனிக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி

சென்னை அணி

இதனால் சென்னை அணியை உருவாக்கும் வகையில் கடந்த ஆண்டு கேப்டன்சியை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் ஜடேஜாவுக்கு கேப்டன்சி செய்ய வராததால், மீண்டும் தோனியே தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதுமட்டுமல்லாமல் சென்னை அணிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே பிரச்சினை எழுந்ததாக தகவல் வெளியாகியது.

 ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

இதனால் சென்னை அணியில் இருந்து ஜடேஜா வெளியேறப் போவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜடேஜாவை சென்னை அணி தக்கவைத்தது. அதேபோல் சென்னை அணிக்காக விளையாடிய சில வீரர்களையும் ரீடெய்ன் செய்யவில்லை. இதனால் டிசம்பர் மாத இறுதியில் நடக்க உள்ள ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி சுமார் ரூ.20 கோடியுடன் பங்கேற்க உள்ளது.

வெளிநாட்டில் தோனி

வெளிநாட்டில் தோனி

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சிஎஸ்கே அணி கேப்டன் தோனி மீண்டும் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தோனி லண்டன் சென்றார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஓபன் தொடரை காண்பதற்காக அமெரிக்கா சென்றார். விடுமுறை நாட்களை வெளிநாட்டில் கொண்டாடி வந்த தோனி, அண்மைக் காலமாக விளையாட்டு மற்றும் உடல்தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.

உடல்தகுதி

உடல்தகுதி

அண்மையில் ராஞ்சியில் எம்எஸ் தோனி டென்னிஸ் விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. அப்போது தோனி உடற்தகுதியுடன் இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தோனி, மீண்டும் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 2 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும், தோனி உடலை கிரிக்கெட்டுக்கு ஏற்ப பராமரித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, November 24, 2022, 22:00 [IST]
Other articles published on Nov 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+