Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்திரி அழுதுட்டாரு.... ரிஷப் பந்த் ரொம்ப உணர்ச்சிவசப் பட்டுட்டாரு... நினைவு கூர்ந்த குல்தீப்

டெல்லி : கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது.

குறிப்பாக காப்பாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியை அடுத்து ரவி சாஸ்திரி அழுதுவிட்டதாகவும் ரிஷப் பந்த் உள்ளிட்டவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டதாகவும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் அபார வெற்றி

டெஸ்ட் தொடரில் அபார வெற்றி

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரை சிறப்பாக வெற்றி கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இறுதியில் விளையாடப்பட்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை வெற்றி கொண்டு இமாலய சாதனை படைத்தது.

சிறப்பான இறுதிப்போட்டி

சிறப்பான இறுதிப்போட்டி

குறிப்பாக பிரிஸ்பேனின் காப்பாவில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது. புஜாரா, பந்த் உள்ளிட்டவர்கள் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து வீச்சாளர்களின் பௌலிங்கும் குறிப்பிடும்படியாக அமைந்திருந்தது.

நினைவுகூர்ந்த குல்தீப்

நினைவுகூர்ந்த குல்தீப்

இந்த போட்டியின் வெற்றி இந்திய வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் காப்பாவின் வெற்றியை அடுத்து தலைமை கோச் ரவி சாஸ்திரி அழுதுவிட்டதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். யாரி ஸ்போர்சிற்காக பேசிய அவர், இதனை தெரிவித்துள்ளார்.

உணர்ச்சிவசப்பட்ட பந்த்

உணர்ச்சிவசப்பட்ட பந்த்

மேலும் காப்பா வெற்றி இந்திய வீரர்கள் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியதாகவும் குறிப்பாக ரிஷப் பந்த் மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளானதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி இல்லாத இந்த தொடரின் வெற்றியை இந்திய இளம் வீரர்கள் சாத்தியப்படுத்தினர்.

Story first published: Monday, April 5, 2021, 18:21 [IST]
Other articles published on Apr 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+